tg travels

கண்டி , கொழும்பு வீதி வர்த்தக நிலையத்தில் பௌத்தர்களையும் பௌத்த சமயத்தையும் இழிவு படுத்துவதாக கூறி கோப்பைகள் கைப்பற்றல்.

-ஜே. எம். ஹபீஸ்-

கண்டி நகரில் ஒரு வர்த்தக நிலையத்தில் இருந்து புத்தரின் புனித சின்னத்தை தாங்கிச் செல்லும் யானையின் படம் பொறித்த 30 குவளைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 


கண்டி கொழும்பு வீதியிலுள்ள கடை ஒன்றுக்குச் சென்ற சில பெண்கள் குறிப்பிட்ட கடையில் தாகத்திற்கு தண்ணீர் கேட்டதாகவும் அப்போது தண்ணீர் பரிமாறப்பட்ட குவளையில் புனித சின்னத்தை தாங்கிச்செல்வும் (கரண்டுவ) யானையின் சின்னம் அதில் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்ட அவர்கள் இது விடயமாக கண்டிப் பொலீசில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளனர். 


மேற்படி முறைப்பாட்டை விசாரித்த கண்டிப் பொலீசார் அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 30தேனீர் குவளைகளைக் கைப்பற்றியுள்ளனர். 


இது தொடர்பாக கடையிலிருந்த 67 வயது நபரை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 அவர் தமக்கு இது பற்றி விபரம் ஏதும் தெரியாது என்றும் தாம் சாதாரணமாக விற்பனை செய்துவரும் குவளைகள் போன்றே இதனையும் விற்பதற்கு வைத்திருந்ததாகவும் அந்த அடிப்படையிலே தண்ணீர் பரிமாறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


இருப்பினும் இது பௌத்தர்களையும் பௌத்த சமயத்தையும் இழிவு படுத்துவதாகக் கருதப்படமுடியும் என்பதனால் இது தொடர்பான விசாரணைகளில் பொலீசார் ஈடுபட்டுள்ளனர். 


இதில் ஏதும் சதி வேலைகள் இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன



 

கண்டி , கொழும்பு வீதி வர்த்தக நிலையத்தில் பௌத்தர்களையும் பௌத்த சமயத்தையும் இழிவு படுத்துவதாக கூறி கோப்பைகள் கைப்பற்றல். கண்டி , கொழும்பு வீதி வர்த்தக நிலையத்தில் பௌத்தர்களையும் பௌத்த சமயத்தையும் இழிவு படுத்துவதாக கூறி கோப்பைகள் கைப்பற்றல். Reviewed by Madawala News on 9/17/2017 08:01:00 AM Rating: 5