Ad Space avaiable

இன்று முதல் ஒழுங்காக வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு பரிசு.


சட்டம், ஒழுங்கை மதித்து சிறப்பாக வாகனங்களை செலுத்தும் சாரதிகளை இனங் கண்டு அவர்களுக்கு பரிசுகளை வழங்கும் வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


இதன் படி இன்று முதல் கொழும்பு நகரில் இந்த  வேலைத்திட்டம் ஆரம்பமாக வுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித் துள்ளார்.


கொழும்பு நகர வீதிகளில் பொலில் அதிகாரிகள் கண்கானிப்பு   நடவடிக்கைகளில் ஈடு பட்டு சிறப்பாக வாகனங்களை செலுத்தும் சாரதிகளை இனங்கண்டு அவர்களுக்கு வவுச்சர்கள் உள்ளிட்டபரிசுகளை வழங்கி, அவர் களுக்கு  ஊக்கமளிக்கவுள்ளதாக பொலில் பேச்சாளர் தெரிவித் துள்ளார்.


வாகன விபத்துகளை தவிர்க் கும் நோக்கில் வீதி ஒழுங்குவிதிகளை பின்பற்றி வாகன னங்களைச்செலுத்தச்செய்வதற் காகவே இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு முதல் கண்டி நகரில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3 நாட்கள் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் இதன்போது 300 சாரதிகளுக்கு இவ்வாறாக பரிசுகள் வழங்கப்பட்டது எனவும்  பேச்சாளர் மேலும் தெரிவித் துள்ளார்.

இன்று முதல் ஒழுங்காக வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு பரிசு. இன்று முதல் ஒழுங்காக வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு பரிசு. Reviewed by Madawala News on 9/18/2017 01:44:00 PM Rating: 5