Kidny

Kidny

பாவம்.. கொழும்பு முஸ்லிம் பாடசாலை பிள்ளைகள். அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.


கடந்த புதன்கிழமை உங்கள் பத்திரிகையில்  "மேல் மாகாணப் பாடசா லைகளில் ஆசிரியர்கள் கடமை நேரத்தில் வெளியே செல்லும் விபரீதத்தைப் பற்றிய செய்தியை படித்தேன்.


எங்கள் பாடசாலை மேல் மாகாணத்தில் தான் இருக் கிறது.மூன்று பேர் உதவி அதிபர்கள் தகுதியுள்ளவர்கள்.

மூவருள் ஒருவர் முற்பகல் 10.00 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே செல்வார். எங்கே போகிறார் எனக் கேட்டால், டிபார்ட்மெண்டுக்கு போகி றாராம் தினமும் ஏன் டிபார்ட்மெண்ட் போகிறார்?


இன்னொரு உப அதிபர் தனது போன் கடைக்கு மு.ப. 1100 மணியளவில் வாடிக்கையாகத் தினமும் ஒரு விசிட்.

ஒரு ஆசிரியை 2 ஆம் பாடம் முடிய, தன் வீட்டு சமையலுக்கான காய்கறிகளை வாங்கி வரச்செல்வார்.


இன்னுமொரு ஆசிரியர் வகுப்புக்குப் போக மாட்டார். முழு ஸ்கூலையும் சதாவும் வலம் வந்து சுற்றித்திரிவார்.கேட்டால்,அவர் டிசிப்பிலின் சேராம்.

இவ்வருட ஓ.எல் பரீட்சை நடக்க,இன்னும் இரண்டரை மாதங்களே உள்ளன.சிங்கள மொழி மூலம் கற்கும் மாணவிகளுக்கு வகுப் புக்கள் துவங்கி நடக்கின்றன.

தமிழ் மொழி மூலம் கற்கும் மாணவிகளுக்கு இன்னுமே வகுப்புக்கள் நடக்கவில்லை.

பிள்ளைகள் அதிபரிடம் போய் வகுப் பினை வைக்கும்படி கெஞ்சுகிறார்களாம்.

பிரின்ஸிபல் "எட்மிஷன் செய்கிறோம்' என்றே சதாவும் காரணம் கூறுகின்றாராம் அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

சமீபத்தில் கொழும்பு எம். பி. முஜிபுர் ரஹ்மான் தமிழ் மொழி மூலம் கற்பதே பல வழிகளில் நல்லது எனப் பேசினார். இப்படி பாடசா லைகளில் நடக்கும் பாரபட் சத்தில் தமிழ் மீடியத்திற்கு பெற்றோர் எப்படி தம் பிள் ளைகளை சேர்ப்பர்.

கொழும்பு வாழ் முஸ்லிம் மாணவர்களை அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்,

விடிவெள்ளி   பத்திரிகை செய்திக்கு கொழும்பு-12  M. முஸாதிக் அவர்களால் எழுதப்பட்ட ஆதங்கம். சம்பந்தப்பட்ட  அதிகாரிகளை அடைய வேண்டும் என்பதற்காக பகிரப்படுகிறது.
பாவம்.. கொழும்பு முஸ்லிம் பாடசாலை பிள்ளைகள். அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும். பாவம்.. கொழும்பு முஸ்லிம் பாடசாலை பிள்ளைகள்.  அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும். Reviewed by Madawala News on 9/22/2017 02:46:00 PM Rating: 5