Kidny

Kidny

உலகக் கிண்ண உள்ளக கிரிக்கெட்... ஐக்கிய இராச்சியம் செல்லும் இலங்கை அணியில் முஸ்லிம் வீரர்.


இம்மாதம் 16ஆம் திகதி தொடக் கம் 23ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற உள்ள 10ஆவது உள்ளக கிரிக்கெட் (இன்டோர் கிரிக்கட்) உலக கிண்ணப் போட்டித் தொடரில் பங்குபற்றும் இலங்கை அணியின் பெயர் விபரம் அறிவிக்கப்பட் டுள்ளது.

பெயரிடப்பட்டுள்ள இலங்கை உள்ளக கிரிக்கெட் அணியின் தலைவராக தரிந்து மெண்டிஸ் நியமிக்கட்டுள்ளார்.

இதுவரை நடைபெற்றுள்ள 9 உள்ளக கிரிக்கெட் உலக கிண்ணப் போட்டித் தொடர்களிலும் அவுஸ்ரேலிய கிரிக்கட் அணி மட்டும் தான் சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

2004ஆம் ஆண்டு உள்ளக கிரிக்கெட் உலக கிண்ணப் போட்டித் தொடர் இலங்கையில் நடைபெற் றது. இதில் இலங்கை அணி2ஆவது இடத்தை பெற்றுக் கொண்டது.


இந்த தொடருக்காக இலங்கை அணி நேற்று 11ஆம் திகதி டுபாய்
ஐக்கிய அரபு இராச்சியம் செல்லும் இலங்கை அணியில் முஸ்லிம் வீரர் ஒருவரும் சேர்த்துக்கொள்ள பட்டுள்ளார்.

டுபாய் இன்ஸ்போட்டஸ் கிளப்பில் நடை பெறும் இந்த தொடரில் இலங்கை, அவுஸ்திரேலியா, தென்ஆபி ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளன.

இலங்கை உள்ளக கிரிக்கெட் (இன்டோர் கிரிக்கட்) அணி விபரம்
தரிந்து மெண்டிஸ் (தலைவர்)
கமல் குருப்பு
கோலித்த நயானந்த
ருவான் சந்திரகுமார
 நிலந்த விஜேகோன்
 எண்டி சொலமன்ஸ்
 இரோஷன் டி சில்வா
கிரிஷாந்த பீரிஸ்
 அமில ரத்நாயக்க
 ரமேஷ் பெரேரா
சல்மான் பாரிஸ்
திவன்க தபர ஹரேஷ் டி சில்வா
ரணுஷ பெரேரா
அசேல பத்திரன (பயிற்றுவிப்பாளர்)
காமினி பெரேரா (முகாமையாளர்)
ஹிரான் டி மெல்



உலகக் கிண்ண உள்ளக கிரிக்கெட்... ஐக்கிய இராச்சியம் செல்லும் இலங்கை அணியில் முஸ்லிம் வீரர். உலகக் கிண்ண உள்ளக கிரிக்கெட்...  ஐக்கிய இராச்சியம் செல்லும் இலங்கை அணியில் முஸ்லிம் வீரர். Reviewed by Madawala News on 9/12/2017 12:35:00 PM Rating: 5