Kidny

Kidny

இலங்கையில் விளையாட வந்த இந்திய கிரிக்கெட் குழுவொன்றில் ஒருவர் பலி.


ஜா-எல - பமுணுகம பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றுவரும் கிரிக்கெட் போட்டி ஒன்றில் கலந்துகொள்ள, 19 பேர் அடங்கிய இந்தியர்கள் குழுவொன்று நாட்டுக்கு வந்துள்ளது.

இவர்கள் பமுணுகம பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த குழுவைச் சேர்ந்த நால்வர், அந்த ஹோட்டலில் இருந்த நீச்சல் தடாகத்தில் நீராடிய போது, அதில் 12 வயதான சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் குஜராத் பகுதியைச் சேர்ந்த அவர், சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கையில் விளையாட வந்த இந்திய கிரிக்கெட் குழுவொன்றில் ஒருவர் பலி. இலங்கையில் விளையாட வந்த இந்திய கிரிக்கெட் குழுவொன்றில் ஒருவர் பலி. Reviewed by Madawala News on 9/06/2017 12:31:00 PM Rating: 5