Kidny

Kidny

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரியாக Dr.தாரிக் நியமனம்



(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)    

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவின் கீழுள்ள ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரியாக  ஏறாவூரைச்சேர்ந்த வைத்திய அதிகாரி Dr. எம்.எச்.எம்.    தாரிக் தனது கடமைகளை கடந்த 1ம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஏறாவூரைப்பிறப்பிடமாகக் கொண்ட Dr.எம்.எச்.எம். தாரிக் கடந்த 1996ம்  ஆண்டு வைத்தியராக முதல் நியமனத்தை குறித்த இப்பிரதேசத்தில் பெற்றுக்கொண்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, மாஞ்சோலை பிரதேச வைத்தியசாலைகளில் கடமையாற்றி சிறப்பான சேவையை இப்பிரதேசத்துக்கு வழங்கியுள்ளதுடன், இப்பிரதேச மக்களின் நன்மதிப்பைப்பெற்ற ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மென்மேலும் அவரது சிறப்பான சேவை தொடர வாழ்த்துக்கள்.


ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரியாக Dr.தாரிக் நியமனம் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரியாக Dr.தாரிக் நியமனம் Reviewed by Madawala News on 9/12/2017 01:24:00 AM Rating: 5