Ad Space Available here

ECA விருது வழங்கும் நிகழ்வு - 2017
ECA விருது வழங்கும் நிகழ்வு - 2017
ECA Awards 2017 - "Keep on Motivating"

அக்கரைப்பற்று கல்விப் பேரவை (Education Council, Akkaraipattu - ECA), விருது வழங்கும் பெரும் நிகழ்வொன்றை, இன்று (10.09.2017) அதாவுல்லாஹ் அரங்கத்தில் நடத்தியது.

அக்கரைப்பற்றில் 2016 ஆம் ஆண்டு பல்வேறு துறைகளிலும் பிரகாசித்த, சிறந்த அடைவுகளைப் பெற்ற மாணவ மாணவியர் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

மிக நேர்த்தியாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா போன்று விமரிசையாக நடந்தமை குறிப்பிடத் தக்கது. விருது பெற்ற மாணவ, மாணவியர் அதிதிகள் சகிதம் பிரதான வீதி வழியாக ஊர்வலமாக மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றோர், உயர்தரப் பரீட்சையில் தோற்றி வெவ்வேறு துறைகளில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானோர் இதில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விளையாட்டு, தமிழ்த்தினம், மீலாத் தினம், போட்டி நிகழ்ச்சிகள் போன்ற இணைப் பாடவிதான செயற்பாடுகளில் சர்வதேச, தேசிய, மாகாண மட்டங்களில் சிறந்த அடைவுகளைப் பெற்றோரும், மாற்றுத்திறனாளிகளும் கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வில் இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்விப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பீ.சீ. பக்கீர் ஜவ்ஃபர் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த உரை அவையோரை அப்படியே கட்டிப் போட்டு விட்டது என்று சொல்லலாம்.

பேராசிரியர் அவர்கள் அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நீண்டகாலம் இங்கு ஆசிரியப் பணி புரிந்தவர். சிறந்த ஆசிரியர் என்று பெயரெடுத்தவர். தனது சொந்த அனுபவங்களினூடாகவும், அறிவுத் தேடலினூடாகவும் அவர் முன்வைத்த கருத்துக்கள் மிகவும் பெறுமதியானவை.

அடைவுகளினூடாக அதிகம் சாதித்தவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், அடைவு ஊக்கம் (Achievement Motivation) கொண்டவர்கள்தான் சாதிக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. எல்லோரிடமும் இது உள்ளது. ஆனால், அநேகமானோர் இந்த Main Switch ஐ Off பண்ணி வைத்துள்ளனர். On பண்ணினால், விடாது முயற்சித்தால் சாதிக்கலாம் என வலியுறுத்தினார்.

பரீட்சைகளுக்கு மாணவர்களின் அபார திறமைகளை அளவிடும் ஆற்றல் கிடையாது. பரீட்சையில் தோல்வியடைந்த மாணவர்களும் சாதிக்கலாம் என அழகுற விளக்கினார்.

அவருடைய உரையின் பெரும்பகுதி ஆசிரியர்களையே மையப்பொருளாகக் கொண்டிருந்தது. ஆசிரியர்களின் கற்பித்தல் முறை, மாணவர்களது கற்றல் முறை வேறுபாட்டிற்கேற்ப காட்ட வேண்டிய விஷேட கவனம் குறித்து வலியுறுத்தினார்.

சுருங்கச் சொன்னால் Teaching ஐ ஒரு Passion ஆக, அர்ப்பணிப்புடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்ய வேண்டியதன் அவசியத்தை மிக லாவகமாக விளக்கினார். தனது சொந்த அனுபவங்கள், முன்னுதாரணங்கள் மூலம் அவர் சொன்ன விதம் சபையின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது.

அக்கரைப்பற்று ஆயிஷா மகளிர் கல்லூரியில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கற்பித்தபோது, புதிய கலைத்திட்டத்தை எதிர்கொண்டு 100% வீத மாணவர்களும் கணித பாடத்தில் சித்தியைப் பெற்றுக் கொண்ட அனுபவத்தை அவர் சொன்னபோது அரங்கமே கரகோஷத்தால் அதிர்ந்தது.

தனது சொந்த ஊரில் பேராசிரியர் பக்கீர் ஜவ்ஃபருக்கு இன்று Standing Ovation (எழுந்து நின்று கரகோசம் செய்த) சிறப்புப் பாராட்டு கிடைத்தது.

இன்றைய நிகழ்வின் Keynote Speaker ஆக பேராசிரியரைத் தெரிவு செய்தமைக்காக ECA யிற்கு பலரும் பாராட்டுத் தெரிவித்தனர்.

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட ECA அமைப்பில் அக்கரைப்பற்றின் முக்கிய கல்வியாளர்கள் அங்கம் வகிக்கின்றனர். பல கல்வித் துறை வழிகாட்டல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த ECA Awards நிகழ்வு பிரதி வருடமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டடது. சிறந்த அடைவுகளை எய்தியவர்களைப் பாராட்டுவதோடு, ஏனைய மாணவ மாணவியரை உற்சாகமூட்டி தூண்டி விடுவதே தமது இலக்கு என ECA பற்றிய அறிமுக உரையில் Dr. Tsrtr Rajab கூறினார்.

ஆரம்ப உரையை கலாநிதி Abdul Majeed Muzathik நிகழ்த்தினார். நிகழ்வுகள் ECA யின் தவிசாளர் தையார் சேரின் தலைமையில் இடம்பெற்றது. பக்கீர் ஜவ்ஃபர் சேர் பற்றிய அறிமுக உரையை, தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ஸெய்னுடீன் நிகழ்த்தினார். நன்றியுரையை பொறியியலாளர் பௌஸ்டீன் நிகழ்த்தினார்.

இந்த விழா சிறப்புற நடைபெற ECA யின் உறுப்பினர்களான விவசாயத் துறை ஆய்வாளர் இக்பால் சேர், ஆங்கில பாட விரிவுரையாளர் சுபைதீன் சேர் ஆகியோரும் பங்களித்தனர். குறிப்பாக Dr. Thameem Musthafa , Manaff Ahamed Risadh, விரிவுரையாளர் அல்டாஃப் ஆகிய இளம் செயற்பாட்டாளர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்களின் பங்களிப்பு உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் இன்றைய நாள் அக்கரைப்பற்றின் கல்வி வரலாற்றில் தனித்துத் துலங்கும் நாள்- ஒளிரும் நாள் (Colourful Day - Eventful Day) என்று சொல்லலாம். ECA யின் ஆக்கபூர்வமான கல்விப் பணிகள் மேலும் செழித்து வளர வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

இன்றைய நிகழ்வில் பரிசு பெற்ற மாணவ, மாணவியர் மிகவும் Smart ஆக இருந்தனர்.பெண்கள்தான் அதிகம் படிக்கிறார்கள், ஆண்கள் சாதிப்பது குறைந்து வருகிறது என்ற கருத்தை சற்று நிதானமாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று உள்ளூர ஒரு எண்ணம் தோன்றியது. அந்தளவுக்கு இருபாலாரும் பல துறைகளிலும் பிரகாசித்துள்ளமை கவனத்திற்குரியது.

அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகள், பெற்றோர், நிகழ்விற்கு நிதியுதவி வழங்கியோர், சமூக ஆர்வலர்கள் என பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வு நான்கு சுவருக்குள் அல்லாமல், திறந்த வெளியில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில், முழு ஊரினதும் ஒரு பொது நிகழ்வாக நடதிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

எது எப்படியாயினும், இது வரவேற்கத் தக்க நல்ல தொடக்கம். First Impression ஏ Best impression ஆக இருந்தது.

Manaff Ahamed Rishad
ECA விருது வழங்கும் நிகழ்வு - 2017  ECA விருது வழங்கும் நிகழ்வு - 2017 Reviewed by Madawala News on 9/11/2017 01:01:00 PM Rating: 5