Kidny

Kidny

சாய்ந்தமருது,கல்முனை, காத்தான்குடி, யாழ்ப்பாணம், மருதமுனை, பரகஹதெனிய பிரதேசங்களில் இன்று இடம்பெற்ற ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நிகழ்வுகள்.



-எம்.வை.அமீர் -

தியாகத்தை நினைவுகூரும் ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு, சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ்
ஜும்ஆ பள்ளிவாசல் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் திடல் தொழுகை, கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது.

அஷ்செய்க் எம்.எஸ்.ஸாதிக் (ஹாமி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்ற பேருரையின்போது தியாகத்தின் வலிமை எடுத்துக்கூறப்பட்டதுடன் அல்லலுறும் மியன்மார் முஸ்லிம்களுக்காகவும் பிராத்திக்கப்பட்டது.


(கல்முனையூர்  அப்ராஸ்)  
கல்முனை ஹுதா திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை(2) இடம்பெற்ற போது ..


காத்தான்குடியில் நபிவழியில் இடம்பெற்ற ஹஜ்ஜூப் பெருநாள் திடல் தொழுகை..!

(S.சஜீத்)
காத்தான்குடி இஸ்லாமிக் சென்டரன் ஏற்பாட்டில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் இன்று (02) சனிக்கிழமை காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளிவாயல் முன்பாக காலை 06.15 மணிக்கு இடம்பெற்றது.

இதன் போது மௌலவி. ஜிப்ரி (மதனி) அவர்களாள் பெருநாள் தொழுகை நடாத்தப்பட்L பெருநாள் குத்பா பிரசங்கமும் இடம்பெற்றது. மேலும் அவரது உரையில் இன்றைய காலகட்டத்தில் மிகவும் கவலைக்கிடமாகவுள்ள மியன்மார்மக்களின் நிலைப்பாடு தொடர்பாகவும் எடுத்துக்கூறி அவர்களுக்காக தற்தமது கைகளை ஏந்தி துஆப்பிரார்த்தனை செய்யுமாறும் வேண்டிக் கொண்டனர்.

மேலும் பல ஆயிரக்கனக்கான மக்கள் தொகை இப்பெருநாள் தொழுகையின் போது கலந்து சிறப்பித்தனர் குறிப்பிடத்தக்கது.



-பாறுக் ஷிஹான்-

ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை யாழில் இரு வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்றது.


யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில்   முஸ்லிம் வட்டார மக்களுக்கான பெருநாள் தொழுகை ஏற்பாடுகள் மௌலவி அப்துல் அஸீஸ் (காசிமி) தலைமையில் நடைபெற்றது.

அத்துடன் யாழ்ப்பாணம் பூங்காவிற்கு முன்னால் இருக்கும் யாழ் மாநகர மைதானத்தில் தௌஹீத் ஜமாத் அமைப்பின் பெருநாள் தொழுகை அஷ்-ஷெய்க் பைசல் (மதனி)  தலைமையில் நடைபெற்றது.

இப்பெருநாள் தினமானது இறை தூதர்களில் ஒருவரான இப்றாஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பிறை பத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

வசதிபடைத்த முஸ்லிம்கள்இ இஸ்லாத்தின் ஐந்து முக்கிய கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா சென்று மார்க்கக் கடமைகளில் ஈடுபடுவார்கள்.

உலகின் சகல பாகங்களில் இருந்தும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா மாநகரில் மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளை கடந்து இலட்சக் கணக்ககானவர்கள் ஒன்றுகூடி ஹஜ் வழிபாடுகளில் ஈடுபடுவது இந்த தினத்தின் விசேட அம்சமாகும்.




புனித ஹஜ்ஜூசுப் பெருநாள் தொழுகை மருதமுனை கடற்கரை திறந்த வெளியில்
(பி.எம்.எம்.ஏ.காதர்)

மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம் ஏற்பாடு செய்த  புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இன்று (02-08-2017)சனிக்கிழமை காலை 6.15 மணிக்கு  மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது.மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையத்தின் பிரதித் தலைவரும்,தாறுல் ஹ_தா அறபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியின் விரிவுரையாளருமான  அஷ்செய்க் எஸ்.எச்.முஜீப் சலபி(எம்,ஏ)தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார்;.இதில் பெரும் தொகையான ஆண்களுக்கும்.பெண்களுக்கும் கலந்து கொண்டனர்.


பரகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜம்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில்  ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை   பள்ளிவாசலில் இடம்பெற்றது.

விசேட தொழுகையினையும் குத்பாபேரையையும் கலாநிதி அம்ஜத் ராசிக் நடத்தி வைத்ததையும்  .இதில் பெரு எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டதையும் இங்கு கடங்களில் காணலாம் .

இக்பால் அலி


சாய்ந்தமருது,கல்முனை, காத்தான்குடி, யாழ்ப்பாணம், மருதமுனை, பரகஹதெனிய பிரதேசங்களில் இன்று இடம்பெற்ற ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நிகழ்வுகள். சாய்ந்தமருது,கல்முனை, காத்தான்குடி, யாழ்ப்பாணம், மருதமுனை, பரகஹதெனிய பிரதேசங்களில் இன்று இடம்பெற்ற ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நிகழ்வுகள். Reviewed by Madawala News on 9/02/2017 11:13:00 AM Rating: 5