Kidny

Kidny

இன்று கிழக்கு மாகாண சபையில் மற்றுமொரு துரோகம் அரங்கேறப்போகிறது.


தமிழ் முஸ்லிம் சமூகங்களின் மீதான மற்றுமொரு திணிப்புக்கு துணைபோகிறது ஒரு கட்சி!

20 வது யாப்பு திருத்தத்தின் தாக்கம் பற்றி ஒரு வரி சொல்லியாக வேண்டும்.

மாகாண சபைகளின் அதிகாரத்தை பிரதமரின் கரங்களுக்குள் தக்கவைத்துகொள்ளும் ஒரு முயற்சி இது.
குறிப்பாக சிறுபான்மையினரின் அதிகாரம் பிடுங்கப்படும் நயவஞ்சகத்தனம்.

ஆனால் பாருங்கள்,

சிங்கள மாகாணசபைகளே இதனை எதிர்த்து வாக்களித்துள்ளது.
வடக்கிலும் ஏகமானதாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கிழக்கு மாகாண சபையில் குறித்த சட்டமூலத்தை ஆதரிப்பதன் மூலம் ரணிலிடம் "அச்சா புள்ளைகள்" என்ற பெயரை சம்பாதித்துகொள்ள சாணக்கிய குழு தயாராகியுள்ளது.

அதற்காகவே வாக்கெடுப்பு தள்ளிப்போடப்பட்டிருக்கின்றது.
இரகசிய கூட்டங்களும் நடந்திருக்கின்றது.

கிழக்கு மாகாணசபையின் "சாணக்கிய குழு" ஒன்றும் "சுத்த பத்தினிகள்" இல்லை.

ஏற்கனவே "திவிநெகும" சட்டமூலத்தை வெற்றி பெறச் செய்த துரோகிகள்.
வாக்களித்துவிட்டு வந்து

"ஆடத்தெரியாத சிலுக்கு, காலுக்க சுழுக்கு என்றாளாம் " என்பது போல பதில் சொன்னவர்கள்.

அதை எல்லாம் நம்பி ஏமாற இங்கு சில மாட்டுமூளைகள் இருக்கின்றன.
நாளையும் இந்த சமூகம் ஏமாற்றப்படும்.

பின் காரணம் சொல்லப்படும்.
ஆடுங்கள்! நன்றாக ஆடுங்கள்!

இன்னும் சில நாட்களிலே இதையெல்லாம் யோசித்துகொண்டு வீட்டில் கொசு அடிப்பீர்கள்.

-VTM இம்ராத் -
இன்று கிழக்கு மாகாண சபையில் மற்றுமொரு துரோகம் அரங்கேறப்போகிறது. இன்று கிழக்கு மாகாண சபையில் மற்றுமொரு துரோகம் அரங்கேறப்போகிறது. Reviewed by Madawala News on 9/07/2017 11:45:00 AM Rating: 5