Kidny

Kidny

மின்னல் தாக்கி ஏ.பைறூஸ் (33) உயிரிழப்பு.


அம்பாறை, இறக்காமம்  பிரதேச செயலகத்துக்குட்பட்ட வரிப்பத்தான்சேனை பள்ளச்சேனைப் பிரதேசத்தில், நேற்று சனிக்கிழமை (16) இரவு 7 மணியளவில் மின்னல் தாக்கி சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்துள்ளாரென, தமன பொலிஸார் தெரிவித்தனர்.

இறக்காமம் வரிப்பத்தான்சேனையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஏ.பைறூஸ் (வயது-33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், கரும்புக் காணியில் வேலை செய்துகொண்டிருக்கும் வேளையிலேயே, மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளாரென,  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
மின்னல் தாக்கி ஏ.பைறூஸ் (33) உயிரிழப்பு. மின்னல் தாக்கி  ஏ.பைறூஸ் (33) உயிரிழப்பு. Reviewed by Madawala News on 9/17/2017 11:47:00 AM Rating: 5