Kidny

Kidny

துணிச்சலாக செயல்பட்ட பொறியியலாளர் முகம்மட் பாரிஸ்க்கு இடமாற்றம். அம்பாரை தீகவாபி ரஜமகாவிகாரையின் விகராதிபதி ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பினார்.


சிங்கள மொழிபெயர்ப்பு

அம்பாரை தீகவாபி ரஜமகாவிகாரையின் விகராதிபதி  ஊடாக பொறியியலாளர் முகம்மட் பாரிஸ் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு  ஜனாதிபதிக்கு மகஜர்.


அம்பாரை மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆத்து மனல், கிறவல் மண், களிமன் போன்ற மன் அகழ்வு தொழில் ஒரு கட்டுப்பாடு இன்றி தான்தேன்றித்தனமாகவும். களவாகவும், உத்தரவு பத்திரம் பெற்ற இடத்தை விட்டு வேறுஇடத்திலும் மன் அகழப்பட்டு விற்பனை செய்யப்பட்டதன் ஊடாக சூழட் சுற்றாடலுக்கு மிகவும் மேசமான பாதிப்பான நடவடிக்கையில் பலர் சென்ற அரசாங்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் .

இதன் பின்னனியில் பல அரசியல் வாதிகளும் செல்வந்தர்களும் பக்க பலமாக மறைமுகமாக செயற்பட்டுக்கொண்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில் இலங்கை அரசியலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தில் தற்போதைய நல்ஆட்சி அரசாங்கத்தில் அதிமேதகு ஜனதிபதி அவர்கள் சூழல் சுற்றாடல், மன் அகழ்வுக்கான அமைச்சுப் பொறுப்பை தனதாக்கி மன் அகழ்வு நடவடிக்கையில் புதிய சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்திய சந்தர்ப்பத்தை சாதகமாக கருதி புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தின் அம்பாரை மாவட்டத்துக்கான பிராந்திய பொறியியலாளராக கடமை பொறுப்பை ஏற்று பனிபுரிய வந்த பொறியியலாளர் எம்.ஆர்.முகம்மட் பாரிஸ் அவர்களின் தற்துணிவான பல அதிகார நடவடிக்கைகளின் ஊடாக பலரின் பலவிதமான எதிர்புகளுக்கும் முகம் கொடுக்க நேரிட்டும்  மண் அகழும,; தொழிலில் முறையில் ஓர் கட்டுப்பாட்டை ஏற்படுத்தி சூழல் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்பை தடுத்தி நிறுத்தியதுடன் அம்பாரை மாவட்ட மக்களின் உன்மையான மன்தேவையினை இணங்கன்டு தட்டுபாடு இன்றி வினியோகம் செய்வதற்கான பொறி முறையை ஏற்படுத்தியிருந்தார்.


இதனால் இவர், பலரின் பலவிதமான எதிர்ப்புகளுக்கும் விமர்சனங்களுக்கும் முகம் கொடுக்க நேரிட்டது. இருந்தும் இவரின் துனிச்சலான அதிரடி நடவடிக்கைகளை சூழல் சுற்றாடல் ஆர்வலர்கள், நீலன்விரும்பிகள், பொதுமக்கள், உயர் அதிகாரிகள் என பலரும் இவரை பாராட்டிக்கொண்டிருந்த நிலையில் - கடந்த வாரம் திடீர் இடமாற்றம் ஒன்று வந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.


இன்னும் 03 வருடங்கள் இப்பகுதியில் கடமையாற்ற வாய்ப்பிருந்தும் 02 வருட கால கடமைக்குள் இவர் இடமாற்றம் பெற்றுள்ளது மன் அகழ்வு தொழிலை தான்தோன்றித்தனமாக செய்வதற்கு ஏத்தனிக்கும் கூட்டத்தின் வேலையாக இருக்கும் என எண்ணத்தேன்றுகின்றது.


எனவே எமது பகுதி அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் அதிமேதகு ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு இவ் இடமாற்றத்தை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதுடன்
 சூழல் சுற்றாடலையும் இலங்கையின் வழததினையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக எத்தனையே பெரும் அமைச்சுப் பொறுப்புக்களை உதறிதள்ளிவிட்டு சூழல் சுற்றாடல் அமைச்சினை மட்டும் தன்வசம் கொண்டுள்ள அதிமேதகு ஜனாதிபதி அவர்களே உங்களுடைய சூழல் சுற்றாடல் பாதுகாப்பதற்கான என்னத்தை ஈடேட்டுவதற்கு இவ்வாறான இடமாற்றங்களை ரத்து செய்து இலங்கை வாழ் மக்களின் வளத்தை பாதுகாக்குமாறு தயவன்புடன் வேண்டுகின்றேன்.

ஆ.ஆ.நிலாம்டீன்

துணிச்சலாக செயல்பட்ட பொறியியலாளர் முகம்மட் பாரிஸ்க்கு இடமாற்றம். அம்பாரை தீகவாபி ரஜமகாவிகாரையின் விகராதிபதி ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பினார். துணிச்சலாக செயல்பட்ட பொறியியலாளர் முகம்மட் பாரிஸ்க்கு இடமாற்றம்.  அம்பாரை தீகவாபி ரஜமகாவிகாரையின் விகராதிபதி  ஊடாக  ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பினார். Reviewed by Madawala News on 9/09/2017 07:08:00 AM Rating: 5