tg travels

சாராயம் என நினைத்து, சடலங்களுக்கு ஊற்றும் போமலினை குடித்து வைத்தியசாலைப் பணியாளர் மரணம்.


மரணமானவர்களின் உடலைப் பாதுகாக்கும் போமலின் எனப்படும் நச்சுத்திரவத்தை கசிப்பு என நினைத்து அருந்திய வைத்தியசாலைப் பணியாளர் ஒருவர் மரணமாகியுள்ளார்.


மரணமானவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மிக நீண்ட காலமாக சுகாதாரப் பணி உதவியாளராகக் கடமையாற்றி வந்த கிளிநொச்சி ஜெயந்திந கரைச் சேர்ந்த முருகன், குணசீலன் (வயது
53) என்பவராவார்.


சம்பவ தினம்  காலை வைத்தியசாலை பிரேத அறையில் வைத்து கசிப்பு என நினைத்து தவறுதலாக போமலினை அருந்திய குறித்த நபருக்கு அவசர சிகிச் சையளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார்.

இம்மரணம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடை பெற்று வருகின்றன.

சாராயம் என நினைத்து, சடலங்களுக்கு ஊற்றும் போமலினை குடித்து வைத்தியசாலைப் பணியாளர் மரணம். சாராயம் என நினைத்து, சடலங்களுக்கு ஊற்றும் போமலினை குடித்து  வைத்தியசாலைப் பணியாளர் மரணம். Reviewed by Madawala News on 9/06/2017 01:34:00 PM Rating: 5