Ad Space avaiable

கண்டி, கட்டுகஸ்தோட்டை மற்றும் அயல் பிரதேசங்களில் நடமாடும் மோசடி கும்பல்.. போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை.


கண்டி,  கட்டுகஸ்தோட்டை  மற்றும் அயல்  பிரதேசங்களில் அரச சேவையில் இருந்து ஒய்வு பெற்ற பெண்களை ஏமாற்றி தங்க நகை மற்றும் பணத்தை கையாடல் செய்யும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை யுடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கண்டி, கட்டுகஸ்தோட்டை ஆகிய பிரதேசங்களில் அரச சேவையில் இருந்து ஒய்வு பெற்ற பெண்கள் இருக்கும் வீடுகளை தேடிச் சென்று அவர்களுக்கு ஒய்வூதிய பணம் மிகுதியாக இருப்பதாகவும் அதனை பெற்றுக் கொள்வதற்கு ஒரு தொகை பணம் செலுத்த வேண்டும் என்று கூறி பணம் அல்லது தங்க ஆபரணங்களை அபகரித்துச் செல்லும் கும்பல் ஒன்று நடமாடுவதாகவும் பொலிஸார் மேலும் எச்சரித்துள்ளனர்.


இவ்வாறு பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் மோசடி செய்த பல சம்ப வங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதால் வீடுகளுக்கு எவரேனும் வந்தால் ஏமாற வேண் டாம் என்றும் உடனடியாக அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கண்டி, கட்டுகஸ்தோட்டை மற்றும் அயல் பிரதேசங்களில் நடமாடும் மோசடி கும்பல்.. போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை. கண்டி,  கட்டுகஸ்தோட்டை  மற்றும் அயல்  பிரதேசங்களில் நடமாடும் மோசடி கும்பல்.. போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை. Reviewed by Madawala News on 9/18/2017 11:14:00 AM Rating: 5