tg travels

ஷப்பா... என்னா ஒரு கிரிமினல் மைண்டு? உங்க கிட்டவும் வருவாங்க கவனமா இருங்கப்பா .


திரைப்பட சூட்டிங் எடுப்பதாக கூறி ஆடுகளை வாங்கிச் சென்ற நபர் ஆட்டு உரிமையாளரை ஏமாற்றிவிட்டு ஆடுகளை திருடிச்சென்றுள்ளார்.

இச்சம்பவம் வவுனியா ஆச்சிபுரப்பகுதியில் நேற்று(07) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:


வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் ஆட்டுப் பட்டி வைத்திருக்கும் ஒருவரிடம், ஹயஸ்ரக வாகனத்தில் வந்த நபர் ஒருவர், தான் திரைப்பட சூட்டிங் செய்யவுள்ளதாகவும் அதற்கு 15 ஆடுகள்  வாடகைக்கு  தேவை எனவும் கூறியுள்ளார்.

இதற்கு ஆட்டு உரிமையாளரும் சம்மதித்தநிலையில் பிறிதொரு இடத் தில் சூட்டிங் நடப்பதால் ஆடுகளை கொண்டு செல்ல வேண்டுமெனக் கூறி 15 ஆடுகளைஹயஸ் ரக வாகனத்தில் ஏற்றியதுடன், ஆடுகளை வழங் கியமைக்காக உரிமையாளருக்கு 20ஆயிரம் ரூபா பணத்தையும் கொடுத் துள்ளார்.


ஆட்டு உரிமையாளரையும், ஆடுகளையும் ஏற்றிக்கொண்டு வவுனியாவுக்கு வந்த குறித்த நபர் பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு அருகில் உள்ள இராணுவ உணவுச்சாலை அருகே வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

பின்னர் சோடா வாங்கி வருமாறு ஆட்டு உரிமையாளரிம் 200 ரூபா பணத்தையும் அவர் கொடுத்துள்ளார்.


சோடா வாங்கிக் கொண்டு வாகனம் நின்ற இடத்திற்கு வந்த ஆட்டு உரிமையாளர் அங்கே வாகனத்தை காணாது திகைத்து ஆடுகள் திருட்டுப்போயுள்ளதை தெரிந்து கொண்டார்.

 இதனையடுத்து திட் டமிட்டு இந்த திருட்டு இடம்பெற் றதை உணர்ந்த ஆட்டு உரிமையாளர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிசார் இது தொடர் பான விசாரணைகளை மேற்கொணடு வருகின்றனர்.

ஷப்பா... என்னா ஒரு கிரிமினல் மைண்டு? உங்க கிட்டவும் வருவாங்க கவனமா இருங்கப்பா . ஷப்பா... என்னா ஒரு கிரிமினல் மைண்டு?  உங்க கிட்டவும் வருவாங்க கவனமா இருங்கப்பா . Reviewed by Madawala News on 9/08/2017 11:30:00 AM Rating: 5