Yahya

கைக்குண்டு ஒன்றை புத்தகப்பையில் வீட்டுக்கு எடுத்துச் சென்ற சிறுவன்! #இலங்கை


ஏ.எம்.சுல்பிகார் BA (Hons)

கைக்குண்டு ஒன்றை ஏழு வயது சிறுவன் வீட்டுக்கு எடுத்துச் சென்ற சம்பவம் ஒன்று யாழ். குப்பிளான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பழைய இரும்பென நினைத்து கைக்குண்டு ஒன்றை சிறுவன் வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, விரைந்து செயற்பட்ட பொலிஸார் குண்டை பாதுகாப்பாக மீட்டு சென்றுள்ளனர்.

யாழ். புன்னாலை கட்டுவான் பாடசாலையில் கல்வி கற்று வரும் ஏழு வயது சிறுவன் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய போது இந்த கைகுண்டு வெடிக்காத நிலையில் வீதியில் கிடந்துள்ளது.

இந்நிலையில், பழைய இரும்பு என நினைத்து அதனை புத்தகப்பையில் வைத்து குறித்த சிறுவன் வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளார். பின்னர் தான் எடுத்து வந்த பொருளை இளைஞர் ஒருவரிடம் இந்த சிறுவன் காண்பித்துள்ளார்.

இதன் போதே சிறுவன் எடுத்து வந்தது கைக்குண்டு என அடையாளம் காணப்பட்டது. இதனையடுத்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விரைந்து செயற்பட்ட பொலிஸார், கைக்குண்டை பாதுகாப்பாக மீட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைக்குண்டு ஒன்றை புத்தகப்பையில் வீட்டுக்கு எடுத்துச் சென்ற சிறுவன்! #இலங்கை கைக்குண்டு ஒன்றை புத்தகப்பையில் வீட்டுக்கு எடுத்துச் சென்ற சிறுவன்! #இலங்கை Reviewed by Madawala News on 9/29/2017 02:04:00 PM Rating: 5