Kidny

Kidny

தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை அலுமாரிகளில் வைக்க வேண்டாம். உதவி பொலிஸ் அத்தியட்சகர் வேண்டுகோள்.


பாறுக் ஷிஹான்-

தென்மராட்சி பிரதேச மக்கள் தங்கள் வீடுகளில் வைத்திருக்கும் தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை பூசை அறைகள் மற்றும் அலுமாரிகளில் வைப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என சாவகச்சேரி, கோப்பாய் கொடிகாமம் பிரதேசங்களுக்கு பொறுப்பான  உதவி  பொலிஸ் அத்தியட்சகர் துசிதகுமார தெரிவித்துள்ளார்.

அண்மையில் அதிகரித்துவரும் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் பொதுமக்கள் தங்களின் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பொருட்களை வீட்டின் பூசை அறைகளில் மற்றும் அலுமாரிகளில் பாதுகாத்து வருகின்றனர்.

இதனால் திருடர்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகின்றது.


பொதுமக்கள் அவ்வாறன நிலையில் இருந்து விடுபட்டு தங்களின் பொருட்களை வங்கிகளின் பாதுகாப்பு பெட்டிகளில் அல்லது வீட்டின் வேறு இடங்களுக்கு மாற்றி வைக்கவேண்டும். என அவர் தெரிவித்தார்.
தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை அலுமாரிகளில் வைக்க வேண்டாம். உதவி பொலிஸ் அத்தியட்சகர் வேண்டுகோள். தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை அலுமாரிகளில் வைக்க வேண்டாம். உதவி  பொலிஸ் அத்தியட்சகர் வேண்டுகோள். Reviewed by Madawala News on 9/07/2017 01:49:00 PM Rating: 5