Kidny

Kidny

வடகொரியாவின் அணுவாயுத பரிசோதனைக்கு இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம்.


வடகொரியாவின் அணுவாயுத பரிசோதனையை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது.

இது பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் சமாதானத்துக்கு அச்சுறுத்தலாகவும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பிரகடனத்தை மீறும் வகையில் அமைந் திருப்பதாகவும் இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.


வடகொரியா செப்டம்பர் மாதம் 03) அணுவாயுத பரிசோதனையை முன்னெடுத்திருந்ததைக் கண்டித்தே இலங்கை இந்த அறிக்கையை வெளி யிட்டுள்ளது.


இவ்வாறான நடவடிக்கைகளைத் தொடரவேண்டாம் என சர்வதேசத் துடன் இணைந்து தாமும் கோரிக் கைவிடுப்பதாகவும் இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு உட் பட்டு நடப்பதுடன், அமைதியான முறையில் தீர்வு, பேச்சுவார்த்தைகள் ஊடாக பிரச்சினைகளைத் தீர்த்தல் என்பவவற்றின் ஊடாக சமாதானத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்றும் இலங்கை கோரியுள்ளது.


அதேநேரம், நேற்றுமுன்தினம் ஐ.நா பாதுகாப்பு சபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்றிருக்கும் இலங்கை அரசாங்கம், ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் மதிப்பளித்து செயற்படும் என்றும் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் அணுவாயுத பரிசோதனைக்கு இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம். வடகொரியாவின் அணுவாயுத பரிசோதனைக்கு  இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம். Reviewed by Madawala News on 9/13/2017 09:27:00 AM Rating: 5