tg travels

GREAT EAST உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி -2017 பிரம்மாண்ட ஆரம்பம்.


GREAT EAST  உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி -2017  நேற்று  வியாழக்கிழமை  (14.09.2017) காலை 10 மணிக்கு  கல்லடியிலுள்ள கிரீன் கார்டன் ஹொட்டலில்கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாருக் ஆகியோரினால்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக்கண்காட்சியில் 25  பிரபல்யமிக்க  அரச, தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பங்கு பெற்றுகின்றன.

இக்கண்காட்சிக்கு காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம், காத்தான்குடி மீராபாலிகா வித்தியாலயம், ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலயம், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம் மற்றும் பல கல்லூரிகள் கலந்து கொண்டன.

இக்கண்காட்சி எதிர்கால தொழிற்சந்தைக்கு ஏற்ற வகையில் உயர்கல்வி வாய்ப்புக்களைத் தெரிவுசெய்தல் மற்றும் தெழில் தேடுவோருக்கான தொழில் வாய்ப்புக்களை இனங்காணல் என்ற கருப்பொருளில் இடம்பெறுகின்றது.

இன்று  வெள்ளிக்கிழமை  (15.09.2017) காலை 9 மணியிலிருந்து மாலை 7 மணி வரை இக்கண்காட்சியானது நடைபெறும்.











GREAT EAST உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி -2017 பிரம்மாண்ட ஆரம்பம். GREAT EAST  உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி -2017 பிரம்மாண்ட ஆரம்பம். Reviewed by Madawala News on 9/15/2017 08:33:00 AM Rating: 5