Kidny

Kidny

கேஸ் சிலிண்டர் வெடித்து பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பரிதாப மரணம்.


கேஸ் அடுப்பைப் பற்ற வைக்கச் சென்ற வேளையில் சிலிண்டர் வெடித்ததால் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் எரிகா யங்களுக்கு உள்ளாகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

வரக்காபொல பொலிஸ் நிலையத்தில் கடமைபுரிந்த ஜீவனி நில்மினி குமாரி குணதிலக்கா என்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிளே மரணமானவர். இவருக்கு வயது 44. இவர் இரு பிள்ளைக ளின் தாயாராவார்.

இவரின் பிரேத பரிசோதனையை கொழும்பு உதவி சட்ட மருத்துவ அதிகாரி கே. வாசுதேவ நடத்தினார்.

மருத்துவ அறிக்கை களையும் சாட்சிகளையும் கவனத்திற் கொண்ட கொழும்பு மாநகர திடீர் மரண விசாரணை அதிகாரி முஹம்மட் அஷ்ரப் ரூமி கேஸ் சிலிண்டர் வெடித்து உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் ஏற்பட்ட விபத்து
மரணமெனத் தீர்ப்பளித்தார்.

மரணமானவரின் கணவரான ருவன் சாந்த பத்திரண வயது (43) மரண விசாரணை முன்னிலையில் சாட்சி யம் அளித்தார்.

கேஸ் சிலிண்டர் வெடித்து பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பரிதாப மரணம். கேஸ் சிலிண்டர் வெடித்து பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பரிதாப   மரணம். Reviewed by Madawala News on 9/16/2017 11:58:00 AM Rating: 5