Kidny

Kidny

கண்டி, மடவளை ஹில்கன்ட்றி சர்வதேசப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா.( படங்கள்)

கண்டி,மடவளை ஹில்கன்ட்றி சர்வதேசப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் Diploma in Teacher Education  Course இனை பூர்த்தி செய்த 11 பேருக்கான விருது வழங்கும் நிகழ்வும் அஷ்ரப் கேட்போர் கூடத்தில் 30.08.2017 புதன்கிழமை  கல்லூரி அதிபர் ஜனாப் A.A.M.Jazil தலைமையின் கீழ்  வெகு சிறப்பாக நடைபெற்றது.

 இவ் வைபவத்தில் பிரதம  அதிதியாக கண்டி இந்திய உதவி உயர் ஸ்தானிகர் ராதா வெங்கடராமன் அவர்களும், விசேட அதிதிகளாக பாடசாலை அதிபர்களும் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தார்கள். பிரதம அதிதி தனது உரையின் போது பரிசில்களை வென்ற மாணவ மாணவிகளை பாராட்டியதுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் Diploma in Teacher Education பாடநெறியினை பூர்த்தி செய்தவர்களில்   Batch Top ற்கான விருதினை Ms.Azra Zakariya வும் Merit Pass விருதினை Ms.Sulaiha Matheen  மற்றும் Ms.Shadiya Ifthikar இருவரும் பெற்றுக்கொண்டனர்.

அங்கு இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகளையும் பிரதம அதிதி பரிசில்கள் வழங்குவதையும் படங்களில் காணலாம்.

HIS
Media Unit



கண்டி, மடவளை ஹில்கன்ட்றி சர்வதேசப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா.( படங்கள்) கண்டி, மடவளை ஹில்கன்ட்றி சர்வதேசப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா.( படங்கள்) Reviewed by Madawala News on 9/10/2017 12:19:00 PM Rating: 5