Kidny

Kidny

வைத்தியர்களின் இழுபறி.. இருதய மாற்றத்துக்கு கொண்டு வந்த இதயம் செயலிழந்த சோகம்.


கண்டி பெரிய ஆஸ்பத்திரியில் செய்யப்படவிருந்த இரண்டாவது இருதய மாற்று சத்திர சிகிச்சைக்கு மூளைச் சாவடைந்த ஒருவரின் இருதயம் பெறப்பட்டுள்ளது.

இருதயம் பொருத்தப்படவிருந்த நோயாளிக்கு  தேவையான ஊசி மருந்தும் ஏற்றப்பட்டிருந்தது. எனினும் வைத்தியர்களின் இழுபறி காரணமாக இருதய சத்திர சிகிச்சை செய்யாமல் கைவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த இழுபறி காரணமாக சத்திர சிகிச்சை கைவிடப்பட்டமையினால் மூளைச் சாவடைந்த இளைஞனின் உடம்பிலிருந்து அப் புறப்படுத்தி இயந்திரத்தில் பொருத் தப்பட்டிருந்த இருதயத்திற்கு பாய்ச்சப்பட்டு வந்த இரத்தத்தை நிறுத்துவதற்கு சத்திர சிகிச்சைக்கு தயாராகவிருந்த வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து 30 நிமிடங்களின் பின்னர் குறித்த இருதயம் முற்றிலும் செயலிழந்திருப்பதாக தெரியவருகின்றது.


பொலன்னறுவை மருத்துவம னையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த மூளைச்சாவடைந்த நபரின் உடல் நேற்று முன்தினம் (21) இரவு விஷேட மருத்துவக் குழுவொன்றின் கண்காணிப்பில் கண்டிக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.

 அந்நபரின் இதயம் சத்திர சிகிச்சையின் மூலம் வேறுபடுத்தப்பட்டு இயந்திரத்தின் துணையோடு செயற்பட வைத்து நோயுள்ள யுவதியொருத்தியின் இதயத்தை அப்புறப்படுத்த அவரை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த முனைந்த வேளையில் விஷேட வைத்தியர்கள் நோயாளிப் பெண்ணுக்கான ஆபத்தை பொறுப்பேற்க முடியாதென அறிவுறுத்தியதை  அடுத்து ஏனைய வைத்தியர்கள் மிகுந்த அசெளகரியங்களுக்கு உள்ளானதாக
தெரிவிக்கப்படுகின்றது.


இவ் விடயம் தொடர்பில் கண்டி பெரியாஸ்பத்திரியின் பணிப்பாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க நேற்று (22) சத்திர சிகிச்சை செய்யவிருந்த வைத்தியர்களிடம் சம்பவம் குறித்து வினவியுள்ளார்.

இதன் காரணமாக சத்திர சிகிச்சை செய்யப்படவிருந்த அழுத்கம பிரதேசத்தை சேர்ந்த 19 வயதையுடைய சசினி செவ்வந்தி உயிராபத்துக் குள்ளாகியிருப்பதுடன் அவளது இருதய செயற்பாடு தற்பொழுது 10% அளவுக்கு குறைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 பொலன்னறுவை பிரதேசத்தில் வசித்த இராணுவச் சிப்பாய் ஒருவ ரான ஆர். எம். தரங்க (26 விபத் தொன்றில் பலத்த காயங்களுக்கு உட்பட்டு பொலன்னறுவை வைத் தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவுக்கு ஏற் பட்டு, வைத்தியர்களின் சிபாரிசின் பின் அவரது அவயங்களை பாதிக்கப்
பட்ட நோயாளிகளுக்கு பொறுத்த உறவினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்  .


 பல வருடங்களாக இருதயக்கோளாறுக்கு இரையாகி ஜீவ மரணப் போராட் டத்தில் பரிதவித்து வந்த செல்வந்தி யின் குறுதியுடன் மூளைச்சாவடைந்த நபரின் இருதயம் 100 பொருந்திய தால் அவ்விதயத்தை செவ்வந்திக்கு பொறுத்துவதற்கு வைத்தியர்கள் தயா ராகயிருந்துள்ளார்கள்.


கடந்த மார்ச் மாதம் முதல் கண்டி மருத்துவமனையில் இருதய எதிர் பார்ப்புடன் காலம் கடத்தி வந்த தனது மகளுக்கு பொறுத்தமான இதயமொன்று கிடைத்தும் அதை பொறுத்த முடியாமல் போனது வைத் தியர்களின் தவறினாலாகும் என்றும் அது தொடர்பில் விசாரணை செய்யு மாறு அரசாங்கத்தை வேண்டுவதா கவும் செவ்வந்தியின் தந்தையான மஹேஷ்குமார தெரிவித்தார்.

யுவதியின்  இருதய செயற்பாடு செயலிழந்திருப்பதனால் சத்திரசிகிச்சை செய்ய முடியாதென கூறினார்கள்.

ஆனால் விசேட மருத்துவர்கள் மூவர் சத்திரிசிகிச்சை செய்ய விரும்பவில்லை என்றே பிறகு அறியக்கிடைத்தது. இது தொடர்பில் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளதாக செவ்வந்தியின் தந்தை தெரிவித்தார்.


"எனது மூத்த மகளும் 17 வயதில் இந்நோயினாலேயே இறந்தார். தற் பொழுதுஇரணடாவதுமகளுக்கும்.அந் நோய்பீடித்துள்ளது. வைத்தியர்கள் இருப்பது நோயாளிகளை கொல்வதற்கல்ல. தற்பொழுது எனக்கு இரண்டா வது மகளும் இல்லாமல் போவாளோ என்ற அச்சம் தோன்றுகின்றது" என மகேஷ் குமார மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் விசேட வைத்தி யர் ஐவரி பெரேராவிடம் வினவிய போது " இவ்விருதய மாற்று சத்திர சிகிச்சை தொடர்பில்தான் ஏற்கனவே அறிந்திருக்கவில்லை என்றும் மருத்துவமனையில் உள்ள ஒருசில பொருட் கள் 11 வருடங்களுக்கும் மேல் பழை மையானவை" என்றும் தெரிவித்தார்.

வைத்தியர்களின் இழுபறி.. இருதய மாற்றத்துக்கு கொண்டு வந்த இதயம் செயலிழந்த சோகம். வைத்தியர்களின் இழுபறி.. இருதய மாற்றத்துக்கு கொண்டு வந்த இதயம் செயலிழந்த சோகம். Reviewed by Madawala News on 9/22/2017 09:55:00 AM Rating: 5