Yahya

மியன்மார் அரசு மீது ஏன் இத்தனை கரிசனை இந்தியாவுக்கு ?


இப்போதுதான் இராணுவத்தின்  இரும்புத் திரை சற்றே
விலக்கப்பட்டு வெளியுலகுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முற்பட்டிருக்கிறது மியன்மார்.

இந்த சூழலில்தான் பிரதமர் நரேந்திர மோடி மியன்மாருக்கு விஜயம் செய்து திரும்பியிருக்கிறார். பிரதமரின் இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்குமிடையே 11 ஒப்பந்தங்கள் கையொப்பம் இடப்பட்டிருக்கின்றன.

கடல்வழி பாதுகாப்பு, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவை மட்டுமல்லாமல் மியன்மாரில் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட ஜனநாயக நிறுவனங்களை பலப்படுத்துவது வரை ஒப்பந்தங்கள் கையொப்பமி டப்பட்டிருக்கின்றன.

மியன்மாருடன் நெருக்கமான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நெருக்கத்தை இந்தியா பலப்படுத்திக் கொள்ளாவிட் டால், மியன்மார் சீனாவின் நட்பு வளையத்துக்குள் சென்று விடும். மியன்மார் சீனாவுடன் அணி சேர்ந்துவிட்டால் வடகிழக்கு மாநிலங் கள் மீதான இந்தியாவின் உரிமை பறிபோகும் ஆபத்து காத்திருக்கிறது.


வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் நாகர்கள் உள்ளிட்ட தீவிரவாதக் குழுக்கள் மியன்மாரிலிருந்துதான் இயங்கி வருகின்றன.

அவற்றைக்கட்டுப்படுத்த இந்தியா வுக்கு மியான்மர் அரசு மற்றும் இரா ணுவத்தின் ஒத்துழைப்பு தேவைப் படுகிறது. அதனால்தான் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய மத்தியில் ஆட்சிபுரிந்த எல்லா அரசுகளும் மியன்மாரின் பிரச்சினைகளில் தலையிடாமல் தவிர்த்து வந்திருக்கின்றன.

இந்திய மியன்மார் உறவில் மிக சிக்கலான தர்மசங்கடமாக உயர்ந் திருப்பது ரோஹிங்கியா அகதிகள் பிரச்சினை.

மியன்மாரைப் பொறுத் தவரை அந்த நாட்டின் பெரும்பான்மையினரான பர்மியர்கள் தங்களது உள்நாட்டு விவகாரத்தில் எந்த ஒரு வெளிநாடும் தலையிடுவதை விரும் புவதில்லை.


ஏனைய தென்கிழக்காசிய நாடுகளைப் போல் அல்லாமல் பெளத்த ஆதிக்கம் மிக அதிகமாக காணப்படும் நாடாக மியன்மார் திகழ்கிறது.

மியன்மாரின் சரித்திரத்தை சற்று திரும்பிப் பார்த்தால், அங்கே பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வந்த தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர் கள் அனைவரையும் அங்கிருந்து வெளி யேற்றி விட்டிருக்கிறார்கள்.

அதேபோல சீனர்களையும் வெளியேற்றி விட்டிருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் அவர் கள் ரோஹிங்கியாக்களையும் வெளி யேற்ற முற்படுகிறார்கள்.


ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்கள் கடந்த இரண்டு மூன்று வாரங்கலில் மியான்மரிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். கடந்த ஒகஸ்ட் 25 முதல் இதுவரை 75 ஆயிரத்துக்கும் அதிகமான வர்கள் மியான்மரின் ராக்கைன் பகுதியிலிருந்து அகதிகளாக வெளியேறி இருப் பதாக ஐ.நா. சபை அறிவித்திருக்கிறது.


அரசபடைகளுக்கும் தீவிரவாதிகளுக் கும் இடையே தொடர்ந்து நடைபெறும்
போராட்டத்தில் பல ரோஹிங்கியா கிராமங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன.

ரோஹிங்கியாக்கள் என்பவர்கள் வங்கதேசத்தை ஒட்டிய மியான்மரின் மேற் கிலுள்ள ராக்கைன் பகுதியில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள். இவர்கள் பெரும்பான்மை பெளத்த மதத்தினரைப் போல் அல்லாமல் இன, மொழி, மத ரீதியாக வித்தியாசமானவர்கள்.

78% குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் பகுதிதான் ரோஹிங்கி யாக்கள் காணப்படும் மியான்மரிலேயே மிகவும் பின்தங்கிய ராக்கைன். 1824-26இல் அன்றைய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ராக்கைன் பகுதியை கைப்பற்றிய போது இந்தியா விலிருந்து பலரையும் அங்கே குடியேற ஊக்குவித்தது.


அன்றைய ஒன்றுபட்ட வங்காளத்திலிருந்து முஸ்லிம்கள் பலர் ராக்கைன் பகுதியில் குடியேறினர். அவர்கள்தான் ரோஹிங்கியாக்கள் என்றழைக்கப்படுகின்றனர்.

 பிரிட்டிஷாரிட மிருந்து விடுதலை பெற்ற பர்மிய அரசு
ரோஹிங்கியாக்களை தங்கள் நாட்டி லுள்ள 35 இனக் குழுக்களில் ஒன்றாக அங்கீகரிக்க மறுத்து விட்டது.

ரோஹிங்கியாக்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட் டிருப்பதால் அவர்கள் நாடில்லா அகதிகளாக அலைய வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறது.

மியான்மரின் அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகியவை ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் தரத் தயாராக இல்லை.

மியான்மரிலிருந்து படகுக வில் வெளியேறுகின்ற ரோஹிங்கியாக் கள் பலர் எந்த நாட்டிலும் அடைக்கலம் கிடைக்காமல் நடுக்கடலில் தத்தளிக்கி றார்கள். பெண்கள், குழந்தைகள் என்று அலைகடலில் மடிந்து போகிறவர்களும் உண்டு. ரோஹிங்கியா பிரச்சினையில் இன்னொரு சிக்கலும் உண்டு.

ரோஹிங் கியாக்கள் பலருக்கும் லஷ்கர்ஏதொய்பா என்கிற பயங்கரவாத அமைப்புடன் தொட்ர்பு இருப்பதாக    போலிக்    குற்றச்சாட்டுகள்   முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அடைக்கலம் தேடி வந்திருக்கும் ரோஹிங்கியாக்களை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்கிற தர்ம சங்கடத்தில் இந்திய மத்திய அரசு சிக்கிக் கொண்டிருக்கிறது.


தனது மியான்மர் விஜயத்தின் போது ராக்கைனில் காணப்படும் வன்முறை குறித்து மியான்மர் அரசுடன் இணைந்து வருத்தம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச நாடாளுமன்ற அமைப்பின் கூட்டத்தில் ராக்கைன் பகுதியில் நடைபெறும் வன்முறை குறித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தவிர்த்திருக்கிறார்.


ரோஹிங்கியாக்கள் பிரச்சினை மியான்மரின் பிரச்சினையோ, வங்கதே சத்தின் பிரச்சினையோ, இந்தியாவின் பிரச்சினையோ அல்ல, இது உலகின் பிரச்சினை.
மியன்மார் அரசு மீது ஏன் இத்தனை கரிசனை இந்தியாவுக்கு ? மியன்மார் அரசு மீது ஏன் இத்தனை கரிசனை இந்தியாவுக்கு ? Reviewed by Madawala News on 9/12/2017 11:38:00 AM Rating: 5