Ad Space avaiable

தீவிரவாதி என குற்றம்சாட்டி புத்தகப்பையை சோதனையிட்ட ஆசிரியர் . மனமுடைந்து முஸ்லிம் மாணவன் தற்கொலை. #இந்தியா


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

இந்தியா:  உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள பாடசாலை ஒன்றில் 11-ம் வகுப்பு பயின்று வந்த முஸ்லிம் மாணவனை தீவிரவாதி என ஆசிரியர் கூறியதால் மனமுடைந்து தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

https://thewire.in/182453/suicide-attempt-student-up-discrimination/

இந்தி்யா உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள கல்யான்பூரில் டெல்லி பப்ளிக் ஸ்கூல் உள்ளது. இங்கு 11-ம் வகுப்பு பயின்ற மாணவன் கடந்த 23-ம் தேதி தனது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டதால் மரணமடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தும் போது மாணவன் எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியுள்ளது. அதில், “நான் இப்பாடசாலையில் 2 மாதத்துக்கு முன் சேர்ந்தேன். நான் துப்பாக்கி வைத்துள்ளேனோ என எனது புத்தகப்பை எப்போதும் சோதனையிடப்படுகிறது. வகுப்பின் கடைசி வரிசையில் நான் உட்காரவைக்கப்படுகிறேன். என்னுடன் யாரும் பேசக்கூடாது என ஆசிரியர் கூறியுள்ளார்” இவ்வாறு கடிதத்தில் எழுதியுள்ள மாணவன், தன்னை ஆசிரியர் தீவிரவாதி போல சித்தரிப்பதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த ஆசிரியர்கள் மீது முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கடிதத்தில் எழுதியுள்ளார். இதனையடுத்து, மாணவன் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் முதற்கட்டமாக ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிரவாதி என குற்றம்சாட்டி புத்தகப்பையை சோதனையிட்ட ஆசிரியர் . மனமுடைந்து முஸ்லிம் மாணவன் தற்கொலை. #இந்தியா தீவிரவாதி என குற்றம்சாட்டி புத்தகப்பையை சோதனையிட்ட   ஆசிரியர் . மனமுடைந்து முஸ்லிம்  மாணவன் தற்கொலை. #இந்தியா Reviewed by Madawala News on 9/30/2017 09:20:00 AM Rating: 5