Kidny

Kidny

கிண்ணியா அனைத்துப் பள்ளிகள் ஒன்றிய ஏற்பாட்டில் ஜனாஸா குளிப்பாட்டல் பயிற்சி .


(ஹஸ்பர் ஏ ஹலீம் )

கிண்ணியா அனைத்துப் பள்ளிகள் ஒன்றிய ஏற்பாட்டில்  ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக பள்ளிகளில் நடாத்தி வரும் ஜனாஸா குளிப்பாட்டுதல் கபனிடுதல் பயிற்சிகள் நிகழ்வானது இன்று (24)காலை இடிமன் புது நகர் பள்ளியில் நடாத்தப் பட்டது. இதேபோன்று ஏனைய பள்ளிகளிலும் நடாத்தப்பட வேண்டும் என்று ஒவ்வொருவரும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

எமது ஒன்றியமானது எந்தவொரு நிதி வருமானங்களும் இன்றி இயங்கிக் கொண்டிருந்தாலும் முடியுமான வேலைத்திட்டங்களை சில சகோதரர் களின் ஒத்துழைப்புடன் செய்து வருகின்றது. என ஒன்றியத்தின் செயலாளர் எம்.எம்.மஹ்தி தெரிவித்தார்.

இவ்வாறான ஒரு ஜனாஸா பயிற்சி வகுப்பை நடாத்த சுமார் 2500/= வரை  செலவாகின்றது. இச் செலவுகளை பொறுப்பேற்க முன்வரும் சகோதரர் கள்  பள்ளிகளூடாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள். ஏனைய பள்ளிகளிலும் நடாத்துவதற்கு ஊக்கமாக இருக்கும் என கிண்ணியா அனைத்து பள்ளிவாயல்கள் ஒன்றியத்தின் செயலாளர் எம்.எம். மஹ்தி மேலும் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலும்,உள்நாட்டிலும் வசிக்கும் எமது சகோதரர்கள் உதவி செய்யவிரும்பின் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டோ அல்லது அமானா வங்கியில் பண மூலமாக உதவலாம்.

செயலாளர் எம்.எம்.மஹ்தி 0772399205

ALL MASJID FEDERATION
A/C:0010258958001
AMANA BANK,KINNIYA

கிண்ணியா அனைத்துப் பள்ளிகள் ஒன்றிய ஏற்பாட்டில் ஜனாஸா குளிப்பாட்டல் பயிற்சி . கிண்ணியா அனைத்துப் பள்ளிகள் ஒன்றிய ஏற்பாட்டில் ஜனாஸா குளிப்பாட்டல் பயிற்சி . Reviewed by Madawala News on 9/24/2017 10:18:00 PM Rating: 5