Ad Space avaiable

ஜப்பானில் கடலில் மூழ்கி உயிரிழந்த கண்டி இளைஞர்களின் ஜனாஸா கொழும்பில் நல்லடக்கம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட பலர் பங்கேற்பு.


ஜப்பானில் கடலில் மூழ்கி உயிரிழந்த கண்டி ஹத்தரலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த இருவரினதும் ஜனாஸா நேற்று இரவு 10 மணியளவில் கொழும்பு ஜாவத்தை பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 கண்டி அலி பிரதர்ஸ் வாகன நிறுவன உரிமையாளரின் உறவினரான மர்ஹும்  நயிமின் புதல்வன் முஹம்மத் அலி (Kobe Motors) மற்றும் அவரின் பேரன் ஸாமித் அலி ஆகியோரே கடந்த சனிக் கிழமை ஜப்பானில் கடலில் குளிக்கச் சென்றவேளை பாரிய அலைக்கு அள்ளுண்டு சென்று உயிரிழந்துள்ளனர்.

 நேற்று இரவு நடைபெற்ற ஜனாஸா நல்லடக்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் தி. மு. ஜயரத்ன, அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.
ஜப்பானில் கடலில் மூழ்கி உயிரிழந்த கண்டி இளைஞர்களின் ஜனாஸா கொழும்பில் நல்லடக்கம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட பலர் பங்கேற்பு. ஜப்பானில் கடலில் மூழ்கி உயிரிழந்த கண்டி இளைஞர்களின் ஜனாஸா கொழும்பில் நல்லடக்கம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட பலர் பங்கேற்பு. Reviewed by Madawala News on 9/26/2017 02:22:00 PM Rating: 5