Kidny

Kidny

மடவளை பஸாரில் நகை கொள்வனவு செய்யும் பாணியில் திருடிய பெண் கைது.


(கண்டி) மடவளை பஸாரில்  தங்காபரணங்கள் கொள்வனவு செய்யும் பாணியில் பெண் ஒருவர்தங்கநகைகளைத் திருடிச்செல்ல முயற்சித்தபோது மடக்கிப் பிடிக்கப்பட்டதாக வத்துகாமம் பொலிசார் தெரிவித்தனர்.


இது பற்றி மேலும் தெரியவருவதாவது:

மடவளை நகரில் சந்தியில்  அமைந்துள்ள பிரபல  நகைக் கடை ஒன்றிற்கு வந்த பெண் ஒரு பெண்  சில தங்க நகைகளைக் கொள்வனவு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 அவ்வாறு நகைகளைத் தெரிவுசெய்யும்போது வேறும் சில தங்கநகைகளை திருடி தனது கைப்பை மற்றும்அணிந்திருந்த புடவைபோன்றவற்றில் பதுக்கியுள்ளார்.

அதன் பின்னர் ஓரிரு நகைகளை கொள்வனவு செய்த பின்னர் கம்பி நீட்ட  எத்தனித் துள்ளார்.

அவ்வாறு தப்பிச் செல்ல முயற்சித்த போது சந்தேகம் ஏற்பட்டதால் CCTV உதவியுடன்  இரு உள்ளூர் பெண்கள் மூலம் அவரை பரீட்சி த்துள்ளனர்.

அப்போது திருடிய தங்கநகைகள்  சிக்கி உள்ளது. உடனே அவற்றை  கைவிட்டு செல்ல முயற்சித்துள்ளார்.

இதனை அடுத்து பொலிஸில் முறைப் பாடு செய்யப்பட்டு பொலிலார் அங்கு வந்து  CCTV . கமராக்களை பரீட்சித்த பின் சந்தேகத்திற்குரிய பெண்ணை கைது செய்துள்ளனர்.

 கைதுசெய்யப்பட்ட சுமார் 45   வயதுடைய இப் பெண் மெனிக்ஹின்ன பிரதேசத்தை சேர்ந்த பெரும்பான்மை இனபெண்   எனத் தெரிய வந்துள்ளது.

இப் பெண்ணை பன்விலை நீதிவான் மன்றில் ஆஜர் செய்தபோது விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வத்துகாமம் பொலிலார் மேலதிக விசா ரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தின் பின்னர் குறிப்பிட்ட பெண்ணின்   மகன்கள்  அக்கடைக்கு  விஜயம் செய்துள்ளனர். அவர்கள் 3 பேரும் மூன்று வங்கிகளில் நல்ல பதவிகளில்  இருப்பதாக    கூறி  அதற்கான  அடையாளத்தையும் உறுதி செய்ததுடன் , தம் தாயார்  ஏன் இவ்வாறான ஒரு வேலையை செய்தார் என எம்மால்  ஊகிக்க முடியாமல் உள்ளது.  இச்சம்பவம்  தொடர்பில்     தாம் மன்னிப்பு  கேட்பதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.
மடவளை பஸாரில் நகை கொள்வனவு செய்யும் பாணியில் திருடிய பெண் கைது. மடவளை பஸாரில் நகை கொள்வனவு செய்யும் பாணியில் திருடிய பெண் கைது. Reviewed by Madawala News on 9/25/2017 12:34:00 PM Rating: 5