tg travels

காத்தான்குடி பெண்களால் , ரோஹிங்யா முஸ்லிம் உறவுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்ட பேரணி..!


(S.சஜீத்)

ரோஹிங்யா முஸ்லிம் உறவுகளுக்காக குரல் கொடுக்கும் வகையில் காத்தான்குடியில் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் மற்றும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (04) காலை 11 மணியளவில் காத்தான்குடி பிரதேச செயலகம் முன்பாக சமூக அக்கரை கொண்ட பெண்கள் அணி ஒன்றுகூடி பெண்கள் சிறுவர்கள் கைகளில் பதாதைகளை ஏந்தியவாரு அமைதியான முறையில் ஆர்ப்பாட்ட பேரணியும் பிரதேச செயளாலரிடம் மகஜர் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வினை காத்தான்குடி பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் மற்றும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவி திருமதி. அமீர் ஹம்ஸா அவர்களின் வழிகாட்டலுடன் இடம்பெற்றதோடு இவ் ஆர்ப்பாட்ட பேரணியின் சாரம்சத்தினையும் அவ்விடத்தில் எடுத்துரைத்தனர். அதாவது முஸ்லிம் உறவுகள் என்ற ஒரே காரணத்திற்காக மியன்மாரிலே தற்போது நடக்கின்ற மனித படு கொலைகளையும் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் உச்ச தன்மத்தை மீறி மிகக் கொடூரமாக கொலை செய்கின்ற காட்சிகளை இன்று எங்களுக்கு பார்க்கின்றபோது உண்மையில் அது எங்களுக்கு மிகவும் மன தேவனையினை ஏற்படுத்துகின்றது.

எனவே இப்படியான ஆபத்தான நிலைப்பாட்டில் இருந்து முஸ்லிம் உறவுகளை விடுவிக்குமாறு வற்புருத்தியே நாங்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியினை முன்னேடுத்துள்ளோம் என்று ஊடங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

காத்தான்குடி பெண்களால் , ரோஹிங்யா முஸ்லிம் உறவுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்ட பேரணி..! காத்தான்குடி பெண்களால் , ரோஹிங்யா முஸ்லிம் உறவுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்  ஆர்ப்பாட்ட பேரணி..! Reviewed by Madawala News on 9/04/2017 02:52:00 PM Rating: 5