Kidny

Kidny

கண்டிக்கு 3300 கோடி ரூபா செலவில் பாரிய குடி நீர் விநியோகத் திட்டம்.


(மொஹொமட் ஆஸிக்)
கண்டி  மாவட்டத்தின் குடி நீர் பிரச்சினையை தீர்க்கும்  முகமாக சீன  அரசின்  கடனுதவியுடன் 3300 கோடி ரூபாய்  செலவில்   நிர்மானிக்கவுள்ள  பாரிய  கண்டி புதிய  நீர் வினியோகத் திட்டத்தின்  ஒப்பந்த்த்திற்கு  இன்னும் ஒரு மாதத்தில்  சீன அரசுடன் கைச்சாத்திட உள்ளதாக நீர் விநியோக  நீர் வழங்கள் மற்றும்  நகர அபிவிருத்தி  அமைச்சரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தலைவருமான  றவுப்  ஹக்கீம் தெரிவித்தார்.


 அமைச்சர்  ஹக்கீமின் நிதி ஒதிக்கீட்டில் 43  இலட்சம் ரூபாய் செலவில் செப்பனிடப்பட்ட  கண்டி  ரம்புக்எல-  ஹல்கொல்லை  பாதையின்   முதற்  பகுதியை திறந்து வைத்த  பின் ஹல்கொல்லையில்  இடம் பெற்ற   கூட்டததில் உரையாற்றும் போதே  அவர்  இதனை தெரிவித்தார்.


இங்கு  மேலும்  கருத்து தெரிவித்த  அமைச்சர்  ஹக்கீம்  இவ்வாறும் தெரிவித்தார்,

கண்டி மாவட்டத்தில் சில பகுதிகளில் பாரிய அளவில் குடி நீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.இதனை  நிவர்த்திசெய்யும் பொருட்டு  சீனாவின் கடன் உதவியுடன்  பாரிய ஒரு நீர் விநியோகத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளோம்..

இதற்கான ஒப்பந்தம் இன்னும் ஒரு மாதத்தில் கைச்சாத்திட உள்ளது.  இத் திட்டத்திற்கு  33,000 மில்லியன் ( 3300 கோடி) ரூயாய் செலவாகுவதுடன்   கண்டி மாவட்டத்தின்  ஆறு  பிரதேச செயலக  பிரிவுகளில் வசிப்போருக்கு  சுமார் நான்கு இலட்சம் புதிய குடி  நீர்  இனைப்புகளை வழங்க முடியும்.

கண்டி மாவட்டத்தில்  மலைப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கும் இத் திட்டத்தின் கீழ் நீர் இனைப்புகளை  பெற்றுக் கொள்ள முடியும்.

இவ்வருடம்  நாட்டில் 300 பில்லியன் ( 30,000 ம் கோடி ) ரூபாய் செலவில்  பல நீர் விநியோகத் திட்டங்கள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்  ஏழு பாரிய திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் றவுப் ஹக்கீம்  இங்கு தெரிவித்தார்.


ஹல்கொல்லை  பிரதேசத்திற்கு அவசரமாக குடி நீரை வழங்குவதற்காக  குழாய் கினறு ஒன்றை நிர்மானிக்கும் பனியை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகவும்,  இன்று திறந்து வைக்கப்பட்ட  பாதையின் மிகுதியாக உள்ள பகுதியையும் அடுத்த வருடம் செப்பநிடுவதற்கு  பணம் ஒதுக்க உள்ளதாகவும்  அமைச்சர்  இங்கு மேலும்  தெரிவித்தார்.

பூஜாபிட்டிய  பிரதேச சபையின்  முன்னால் உப தலைவல் ஏ.எல்.எம். ரஸான் உற்பட பலரும் இங்கு உரையாற்றினர்.

ஆஸிக் -

கண்டிக்கு 3300 கோடி ரூபா செலவில் பாரிய குடி நீர் விநியோகத் திட்டம். கண்டிக்கு  3300 கோடி ரூபா செலவில் பாரிய குடி நீர் விநியோகத் திட்டம். Reviewed by Madawala News on 9/11/2017 08:59:00 AM Rating: 5