Ad Space avaiable

குழந்தையுடன் தனியாக இருந்த பெண்.. அதிகாலையில் வீட்டு கூரையை பிரித்து கொள்ளை. காத்தான்குடியில் சம்பவம்.


காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி-06, நூரணியா மையவாடி வீதியில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தான் வெளியூர் ஒன்றில் கடை வைத்துள்ள நிலையில் வீட்டில்  குழந்தையுடன் தனியாக இருந்த மனைவியின் வீட்டு கூரையை பிரித்து நுழைந்த முகமூடி அணிந்த நான்கு கொள்ளையர்களினால் சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கத்திமுனையில் கொள்ளையிட்டதோடு மனைவி மற்றும் குழந்தை மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் என வீட்டு குடும்பத்தலைவர்  தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குழந்தையுடன் தனியாக இருந்த பெண்.. அதிகாலையில் வீட்டு கூரையை பிரித்து கொள்ளை. காத்தான்குடியில் சம்பவம். குழந்தையுடன் தனியாக இருந்த பெண்.. அதிகாலையில்  வீட்டு கூரையை பிரித்து கொள்ளை. காத்தான்குடியில் சம்பவம். Reviewed by Madawala News on 9/25/2017 11:48:00 AM Rating: 5