Ad Space avaiable

மத்­திய கிழக்கு தொடர்பு... இலங்கையில் தற்கொலை முயற்சி.. ( ஒரு போலிஸ் ரிப்போர்ட்)


விஷ­ம­ருந்­திய நிலையில் மாவ­னல்ல வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட 42 வயது நப­ர் உயிர் பிழைத்த நிலையில் பொலிசாருக்கு வழங்கியுள்ள ஒரு வாக்குமூலம்.


மத்­திய கிழக்கு நாடு ஒன்­றுக்கு பணிப் பெண்­ணாகச் சென்ற மூன்று பிள்­ளை­களின் தாயான 35 வயது பெண் ஒருவர் அங்கு சந்­தித்த இரண்டு பிள்­ளை­களின் தந்­தை­யான 42 வயது நப­ருடன் கள்­ளத்­தொ­டர்பு வைத்­தி­ருந்து அவ­ரிடம் பணம் பெற்­றுக்­கொண்டு நாடு திரும்­பி­யி­ருந்­தார். மேற்படி நபர் தம்மைத் தேடி வந்­த­போது கண­வ­ருடன் சேர்ந்து அவரைத் தாக்கி விரட்­டி­ய­டித்த சம்­ப­வ­மொன்று அர­ணா­யக பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.


எதிர்­பா­ராத இச்­சம்­ப­வத்தால் மன­வே­த­னையும் வெட்­க­மு­ம­டைந்த இந்த நபரே விஷ­ம­ருந்­திய நிலையில் மாவ­னல்ல வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.


மொரொன்­தொட்ட பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ரென கூறப்­படும் இந்த நபரின் கள்­ளக்­கா­தலி கெவி­லி­பிட்­டிய பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ரென தெரி­ய­வந்­துள்­ளது.


இந்த இரு­வரும் சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் மத்­திய கிழக்கு நாடொன்­றுக்கு தொழி­லுக்குச் சென்­றி­ருந்த போது இரு­வ­ருக்­கி­டை­யிலும் ­தொ­டர்பு ஏற்­பட்­டுள்­ளது. இந்த நபர் அங்கு உழைத்த பணத்தை கள்ளக்காத­லிக்கு செல­விட்­டுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.


பின்னர் இரு­வரும் ஒரே விமா­னத்தில் நாடு திரும்­பி­ய­துடன், இரு­வரும் மீண்டும் சந்­திப்­ப­தெனத் தெரி­வித்தே தத்­த­மது ஊர்­க­ளுக்குச் சென்­றுள்­ளனர். இருந்தும் பல வாரங்­க­ளாக பெண்­ணி­ட­மி­ருந்து தக­வ­லெ­துவும் வராத கார­ணத்தால் இந்த நபர் அப்பெண்ணின்  வீட்­டுக்­குச்­சென்­றுள்ளார்.


எதிர்­பா­ராத விதத்தில் கள்ளக்காதலன் தம்மைத் தேடி வந்ததால் அதிர்ச்சியுற்ற பெண் கணவன் எதிரில் போலி குற்றச்சாட்டு சுமத்தி கணவனுடன் இணைந்து கள்ளக்காதலனை தாக்கி விரட்டியடித்துள்ளார். எதிர்­பா­ராத இச்­சம்­ப­வத்தால் மன­வே­த­னையும் வெட்­க­மு­ம­டைந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
மத்­திய கிழக்கு தொடர்பு... இலங்கையில் தற்கொலை முயற்சி.. ( ஒரு போலிஸ் ரிப்போர்ட்) மத்­திய கிழக்கு தொடர்பு...  இலங்கையில் தற்கொலை முயற்சி..  ( ஒரு போலிஸ் ரிப்போர்ட்) Reviewed by Madawala News on 9/27/2017 09:11:00 AM Rating: 5