Kidny

Kidny

கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை... 25000 இலங்கை தொழிலாளர்களை பாதுகாப்பது தொடர்பில் உடனடி நடவடிக்கை.


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக தென்கொரியாவில் தொழில் புரியும் இலங்கையர்கள் தொடர்பில் அவதானத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது.

அங்கு ஆபத்தான நிலையொன்று ஏற்படுமாயின் தென்கொரியாவில் தொழில் புரியும் 25ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கை தொழிலாளர்களை பாதுகாப்பது தொடர்பில் உடனடி நடவடிக்கைகளுக்கான திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி உபுல் தேசப்ரிய தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் -யுன் யுத்தத்துக்கு வழி கோருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதுவர் நிக்கி ஹலே இதனைத் தெரிவித்திருந்தார்.பல்வேறு கண்டனங்களையும், தடைகளையும் மீறி, வடகொரியா கடந்த தினம் அணுகுண்டு சோதனையை நடத்தி வருகிறது.

மேலும் பல ஏவுகணை சோதனைகளையும் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் வடகொரியா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் ஊடாக உலக யுத்தம் ஒன்றுக்கு வடகொரியா வலிந்து அழைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, யுத்த சூழ்நிலையொன்று ஏற்பட்டால் தென்கொரியாவில் வாழும் அல்லது சுற்றுலா பயணங்களில் ஈடுபட்டிருக்கும் சுமார் 60 ஆயிரத்துக்கும் அதிகமான தமது நாட்டு பிரஜைகளை மீட்பதற்கான திட்டமொன்றை ஜப்பான் தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், வடகொரியாவிற்கு எதிரான கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும் வகையிலான பிரேரணை ஒன்றையும் அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை... 25000 இலங்கை தொழிலாளர்களை பாதுகாப்பது தொடர்பில் உடனடி நடவடிக்கை. கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை... 25000 இலங்கை தொழிலாளர்களை பாதுகாப்பது தொடர்பில் உடனடி நடவடிக்கை. Reviewed by Madawala News on 9/05/2017 11:48:00 PM Rating: 5