Ad Space avaiable

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லத்தீபின் மேற்பார்வையில் சுற்றி வளைக்கப்ட்ட கொம்யுனிகேஷன் . தந்தையின் ''தொழிலை'' துல்லியமாக செய்து வந்த மகன் சிக்கினான்.


(எம்.எப்.எம்.பஸிர்) 

வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாபோல பகுதியில் தொலைபேசி அழைப்பு மத்திய நிலையம் (Communication) எனும் பெயரில் இயங்கி வந்த போலி ஆவணங்களை தயாரிக்கும் நிலையம் ஒன்றினை சுற்றிவளைத்த திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவினர் பெரும் தொகையிலான போலி ஆவணங்க ளுடன் 3 சந்தேகநபர்களையும் கைதுசெய்துள்ளனர்.

சாரதி அனுமதிப்பத்திரங்கள், பல்கலைக்கழக பட்டப்படிப்பு சான்றிதழ்கள், சாதாரண தர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் உள்ளிட்ட பல போலி ஆவணங்களை பொலிஸார் மீட் டுள்ளனர்.

அத்துடன் கட்டார், குவைத் மற்றும் சவூதி அரேபிய நாடுகளின் தூதுவ ராலய இறப்பர் முத்திரைகள், பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகளின் 14 இறப்பர் முத்திரைகள், வெளிவிவகார அமைச்சுக்கு சொந்தமான 27 இறப்பர் முத்திரைகள், பல்கலைக்கழகங்களுக்கு சொந்தமான 10 இறப்பர் முத்திரைகள் மாகாண மற்றும் மாந கர சபைகளின் 10 இறப்பர் முத்திரைகள், அரச உயர் அதிகாரிகளின் 14 இறப்பர் முத் திரைகள் இதன்போது பொலிஸாரால் மீட் கப்பட்டுள்ளன.


இவையனைத்தும் அசலைப் போன்று போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், குறித்த போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையத்தினை நடத்தி வந்த மாபோலை பகுதியைச் சேர்ந்த நபரையும் அதற்கு உதவியளித்த தாக நம்பப்படும் கிராண்ட்பாஸ், மருதானை பகுதிகளைச் சேர்ந்த இருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதியும், குற்றம், போதைப் பொருள் தடுப்பு விவகாரங்களுக்கு பொறுப் பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான எம்.ஆர்.லத்தீபின் மேற்பார்வையில் குற்றம் தொடர்பிலான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா, திட்டமிட்ட குற் றங்கள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த லியனகே ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனக குமாரவின் வழிநடத்தலில் உப பொலிஸ் பரிசோதகர் சம்பத், உப பொலிஸ் பரிசோதகர் ராஜித்த கான்ஸ்டபிள்களான லால்குமார, சேனாதீர, இந்திக உள்ளிட்ட குழுவினர் இந்த சுற்றிவளைப்பை முன்னெ டுத்துள்ளனர்.


பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தக வல் ஒன்றின் அடிப்படையில், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரிடம் 3000 ரூபாவைக் கொடுத்து போலியாக சாரதி அனுமதிப் பத்திரம் ஒன்றினை தயாரிக்கும் போர்வையில் இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்ததாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரியிடம் தெரிவித்தார்.

கைதான மாபோலையைச் சேர்ந்த நபரின் தந்தை போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அவர் இறந்த பின்னர் மகன் சாரதி அனுமதிப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை துல்லியமாக போலியாக தயார்செய்து வந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரமானது நவீன சாரதி அனுமதிப்பத்திரத்தை ஒத்ததாக தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றை லெமினேட் செய்ய இறுவட்டுக்களை பொதி செய்யப் பயன்படும் பொலித்தீன் பயன்படுத்தப்பட்டுள்ளமையும் அதிலேயே சாரதி அனுமதிப்பத்திர விடயங்கள் அச்சு செய்யப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட் டுள்ளது.


இந்தப் போலி ஆவணங்கள் தயாரிப் புக்கு 3000 ரூபா முதல் 15 ஆயிரம் ரூபா வரை ஒவ்வொருவரிடமும் அறவிடப்பட் டுள்ளதாக கூறும் பொலிஸார் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு செல்வோரை இலக்கு வைத்து இந்தப் போலி ஆவணங் கள் தயார் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.


இச்சட்டவிரோத நடவ டிக்கை தொடர்பில் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ள பொலிஸார் இவ்வாறான மோசடி தொடர்பில் தகவல் அறிந்தால் தமக்கு உடன் தெரியப்படுத்துமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லத்தீபின் மேற்பார்வையில் சுற்றி வளைக்கப்ட்ட கொம்யுனிகேஷன் . தந்தையின் ''தொழிலை'' துல்லியமாக செய்து வந்த மகன் சிக்கினான். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லத்தீபின் மேற்பார்வையில் சுற்றி வளைக்கப்ட்ட கொம்யுனிகேஷன் . தந்தையின் ''தொழிலை''  துல்லியமாக செய்து வந்த மகன் சிக்கினான். Reviewed by Madawala News on 9/21/2017 11:50:00 AM Rating: 5