Kidny

Kidny

புனித ஹஜ் கடமை நிறைவேற்ற சென்ற ஹாஜியானி மர்லியா அவர்கள் மக்கமா நகரில் வபாத்.



இம் முறை புனித மக்காவுக்கு ஹஜ் பயணம் மேற் கொண்டிருந்த எட்டியாந்தோட்டையை சேர்ந்த ஹாஜியாணி கதீததுல் மர்லியா அவர்கள்  மக்கமா நகரில் காலமான தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எட்டியாந்தோட்டை வர்த்தகர் மொஹிதீனின் மனைவியான இவர், மர்ஹம் அன்ஸார் ஹஸ்ரத் சித்தி றமிஸா தம்பதியரின் மகளும் அமீன், அஸ்மி மர்ஹாமா தஸ்ரினா, தஸ்மினா ஆகியோரின் தாயாரு மாவார்.

அன்னாரின் ஜனாஸா கடந்த திங்கட்கிழமை புனித மக்கா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக அவரது சகோதரர் சாகொட, குருவிற்ற சாஹிறாவின் முன்னாள் அதிபர் எம். ஏ எம். அக்ரம் தெரிவித்தார்.

புனித ஹஜ் கடமை நிறைவேற்ற சென்ற ஹாஜியானி மர்லியா அவர்கள் மக்கமா நகரில் வபாத். புனித ஹஜ் கடமை நிறைவேற்ற சென்ற  ஹாஜியானி மர்லியா அவர்கள் மக்கமா நகரில் வபாத். Reviewed by Madawala News on 9/08/2017 11:07:00 AM Rating: 5