Kidny

Kidny

மியன்மாருக்கு சென்ற மோடி, ஆங் சாங் சூகிக்கு டாக்டர் பட்டத்தை பரிசாக வழங்கினார்.


இந்திய  பிரதமர் மோடி மியான்மர் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர்  அதிபர் ஆங் சாங் சூகியை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு சிறப்பு நினைவு பரிசு ஒன்றை அளித்தார்.

அது சூ கீ இந்தியாவின் சிம்லாவில் ஆய்வு பட்டம்
(டாக்டர்) பெறுவதற்காக அங்குள்ள பிரசித்தி பெற்ற இந்தியன் இன்ஸ்டியூட்
ஒப் அட்வான்ஸ்ட் ஸ்டடி என்ற நிறுவனத்தில் 1986 ஆம் ஆண்டில் ஆய்வு பரிந் துரை அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதன் மூலப்பிர தியை படியெடுத்து அதை சிறப்பு நினைவுப் பரிசாக
மோடி சூ கியுக்கு வழங்கி வைத்துள்ளார்.


சூ கியிக்கு இப்போது 72 வயதாகிறது. அவர் டெல்லியில் கல்வி கற்றார். முதலில் இளங்கலை பட்டத்தை பூரீராம் கல்லூரியில் 1964 ஆம் ஆண்டில் பெற்ற அவர் பின்னர் சிம்லாவில் தனது கணவர் மகன்களுடன் சிறிது காலத்தை கழித்தார்.

மியான்மாரில் ஜனநாயகத்திற்காக போராடியதற்காக ஆங்காங் சூ கியிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

 தற்போது மியான்மாரை ஆட்சி செய்கிறார். என்பதும்      கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 400 ரோஹிங்க்யா முஸ்லிம்கள் கொல்லபட்டும்    இலட்சக்கணக்கான மக்கள் நாட்டில்   இருந்து  விரட்டப்பட்டு  இருப்பதும்  உலகறிந்த  கொடுமைகள்.
மியன்மாருக்கு சென்ற மோடி, ஆங் சாங் சூகிக்கு டாக்டர் பட்டத்தை பரிசாக வழங்கினார். மியன்மாருக்கு சென்ற மோடி, ஆங் சாங் சூகிக்கு டாக்டர் பட்டத்தை பரிசாக வழங்கினார். Reviewed by Madawala News on 9/07/2017 12:04:00 PM Rating: 5