Ad Space avaiable

5 ஆயிரம் பணத்தை திருப்பிக் கேட்டதற்கு தந்தையும் 20 வயது மகளும் சேர்ந்து செய்த கொலை.


சூரியவேவ பிரதேசத்தில் தடி மற்றும் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபருக்கு, கொலை செய்த நபர் 5 ஆயிரம் ரூபா பணம் கொடுக்க இருந்துள்ள நிலையில், அதனை கேட்டு பெற்றுக் கொள்வதற்காக கொலை செய்யப்பட்ட நபர் சென்றுள்ளார்.

இந்நிலையில், குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அறியவந்துள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட நபர் சூரியவேவ - சமாஜசேவபுர பிரதேசத்தினை சேர்ந்த, 42 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் 5 ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொள்வதற்கு சென்றுள்ள போது, பணத் தொகையை கொடுக்காமல் சந்தேக நபர் மற்றும் அவரது 20 வயதுடைய மகளுமே அவரை கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் தனது பணத்தை பல தடவை பெற்றுக் கொள்ள சென்றுள்ள நிலையில், பணத் தொகையினை கொடுக்காமையினை தொடர்ந்து, நேற்று மாலை இருவருக்கு இடையிலும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேக நபர் மற்றும் அவரது 20 வயதுடைய மகள் பணத்தினை கொடுத்த நபரை கொலை செய்து விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து, பணத்தை கொடுத்த இரு பிள்ளைகளின் தந்தை பரிதாபமான முறையில் சந்தேக நபரின் வீட்டின் முன்னே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, தப்பிச் சென்ற சந்தேக நபர் மற்றும் அவரது 20 வயதுடைய மகளை தேடும் நடவடிக்கையினை காவற்துறை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 ஆயிரம் பணத்தை திருப்பிக் கேட்டதற்கு தந்தையும் 20 வயது மகளும் சேர்ந்து செய்த கொலை.  5 ஆயிரம் பணத்தை திருப்பிக் கேட்டதற்கு தந்தையும்  20 வயது மகளும் சேர்ந்து செய்த கொலை. Reviewed by Madawala News on 9/23/2017 01:57:00 PM Rating: 5