Kidny

Kidny

பிக்குமார்களுக்கு பன்றி இறைச்சியைத் தானமாகப் போடும் அளவுக்கு எமது சமூகம் சீர்கெட்டுப்போயுள்ளது. பெளத்த வரலாற்றில் என்றும் கண்டிராத இருண்ட யுகம்.


பிக்குமார்கள் ஏந்திச் செல்லும் பிட்சா பாத்திரங்களில் பன்றி இறைச்சியைத் தானமாகப் போடும் அளவுக்கு எமது சமூகம் சீர்கெட்டுப்போயுள்ளது. பெளத்த வரலாற்றில் என்றும் கண்டிராத இருண்ட யுகமொன்றுக்குள் நாடு தள்ளப்பட்டிருக்கிறது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

வெல்லவாய ஹந்தபானாகல கெஹலிய ராஜமகா விகாரையின் அருகே நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரை யாற்றும் போதே மகிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கூறியதாவது,

மிகவும் கவலைப்படக் கூடி யதும் இருள் நிறைந்ததுமான
காலம் ஒன்று உருவாகியிருக்கிறது.

மேற்படி கீழ்த்தரமான வேலை களில் பிற சமூகத்தவர்கள் அல்ல. அசல் பெளத்தர்கள்தான் ஈடுபட்டு வருகிறார்கள். அரசியல் பின்னணியில் தான் இவை அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

பிக்குமார் அவமதிக்கப்படுகிறார்கள். பிக்குகளை பிச்சைக்காரர்கள் என்று அகெளரவிக்கிறார்கள். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை அரசியல் தலைவர்கள் பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கி றார்கள் .

விகாரை உண்டியல் பணத்திற்கு வரி அறவிடுகிறார்கள், உண்டியல்களை பலவந்தமாக அபகரித்துச் செல்கிறார்கள். பெளத்த மக்களுக்கு என்றும் இல்லாதவாறான இன்னல்களை  தொடுக்கும் யுகமே இப்போது தோன்றியுள்ளது.

அரசியல் யாப்பில் காலங்கால மாக இருந்து வந்த புத்த சமயத் துக்குள்ள முன்னுரிமை ஷரத்து மாற்றப்படவேண்டிய அவசியம் இல்லை.
அப்படியிருந்தும் புதிய யாப்பு மூலம் அதுவும் மாற்றப்பட் டுள்ளது.

இது மதச்சார்பற்ற ஒரு நாடு என்று தமிழ் எம்.பி. ஒருவர் கூறியிருக்கிறார்.

இதற்காகவே தான் யாப்பு மாற்றப்படுகிறது. இதற்குத்தானா பெளத்த மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள் யாப்பை மாற்றும்படி நாம் கோர வில்லை. இந்த யாப்பு மாற்றம் மூலம் நாடு பிரிக்கப்படப் போகிறது.

ஜனாதிபதியிடமுள்ள அதிகாரங்கள் மாகாண முதலமைச்சர்க ளிடம் சென்றடையப் போகிறது.

வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு அதன் மூலம் நாடு முதலாவதாக பிளவுபடப்போகிறது. நானோ எமது கூட்டு எதிரணி யினரோ ஒரு போதும் இதனை அங்கீகரிக்கப் போவதில்லை.

இந்த விடயத்தில் நாம் அசட்டையாக இருப்போமானால் எமது எதிர்கால சந்ததியினர்தான் பாதிக்கப்போகிறார்கள். எமது நாட்டு வளங்கள் விற்கப்படுகின்றன. மத்தள விமான நிலையத்தையும் விற்பதற்கு முயற்சிக்கிறார்கள் என்றார்.

பிக்குமார்களுக்கு பன்றி இறைச்சியைத் தானமாகப் போடும் அளவுக்கு எமது சமூகம் சீர்கெட்டுப்போயுள்ளது. பெளத்த வரலாற்றில் என்றும் கண்டிராத இருண்ட யுகம். பிக்குமார்களுக்கு பன்றி இறைச்சியைத் தானமாகப் போடும் அளவுக்கு எமது சமூகம் சீர்கெட்டுப்போயுள்ளது.  பெளத்த வரலாற்றில் என்றும் கண்டிராத இருண்ட யுகம். Reviewed by Madawala News on 9/28/2017 11:53:00 AM Rating: 5