Ad Space avaiable

இலக்கு வைக்கப்பட்ட சிரியா.


Muja ashraff-

தனது நலனுக்காக அமெரிக்கா முஸ்லிம் பயங்கரவாதத்தை ஊற்றி வளர்க்கும் என்பதற்கு சிரியா இன்னுமொரு உதாரணமாக உள்ளது
ஆப்கானிஸ்தான், இராக், லிபியா  அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, மறுகாலனியாக்கப்பட்டுள்ள இந்த நாடுகளின் வரிசையில் அடுத்ததாக சிரியா குறிவைக்கப்பட்டுள்ளது.

வடக்கே துருக்கியையும், கிழக்கே இராக்கையும், மேற்கே இசுரேல் மற்றும் லெபனானையும் எல்லைகளாகக் கொண்ட சிரியா, மேற்காசியாவின் தொன்மையான நாகரிகம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.  1960களில் சிரியாவில் பாத் கட்சியின் தலைமையில் ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டு, அல் அஸாத் சிரியாவின் அதிபரானார்.  அவர் இறந்த பின் அவரது மகனான பஷார் அல் அஸாத் சிரியாவின் அதிபராக முடிசூட்டப்பட்டார்.

சுன்னி பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், ஷியா முஸ்லிம்கள் ஒரு பிரிவான அலாவி முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள், குர்து இனத்தவர்கள் சிறுபான்மையினராகவும் வசிக்கும் சிரியாவில் விவசாயமும், கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் முக்கியத் தொழில்களாக உள்ளன.
பாத் கட்சியின் ஆட்சி நிறுவப்பட்ட பிறகு, சிரியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அவசரநிலை பாசிச காட்டாட்சிதான் நடந்து வருகிறது.  பெயரளவிலான முதலாளித்துவ சீர்திருத்தங்கள், உரிமைகள்கூட அந்நாட்டு மக்களுக்கு பாத் கட்சி ஆட்சியின் கீழ் வழங்கப்படவில்லை என்பதெல்லாம் உண்மைதான்.  அதேசமயம், பாத் கட்சியின் ஆட்சியை எதிர்க்கும் எதிர்த்தரப்பு ஒன்றும் சொக்கத் தங்கம் கிடையாது.

மன்னராட்சி நடைபெறும் சவூதி அரேபியா, இராணுவ சர்வாதிகார ஆட்சி நடைபெற்ற ஜனநாயகத்துக்கு திரும்பிய துருக்கி, மத அடிப்படைவாதக் கட்சியான முஸ்லிம்  சகோதரத்துவக் கட்சி, ஜிஹாதிகள் உள்ளிட்ட ஒரு கும்பல்தான்  பிற்போக்குத்தனமும் ஏகாதிபத்திய அடிவருடித்தனமும் நிறைந்த கும்பல்தான் சிரியாவில் உள்நாட்டுப் போரைத் தூண்டிவிட்டு நடத்தி வருகிறது. சிரியாவில் பஷார் அல் அஸாத் ஆட்சியைத் தூக்கியெறிந்து, அங்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலன்களைப் பாதுகாக்கும் பொம்மையாட்சியொன்றை நிறுவ வேண்டும் என்பதைத் தாண்டி, இக்கும்பலுக்கு வேறு நோக்கம் கிடையாது.
இலக்கு வைக்கப்பட்ட சிரியா. இலக்கு வைக்கப்பட்ட சிரியா. Reviewed by Madawala News on 9/28/2017 10:15:00 PM Rating: 5