Kidny

Kidny

முரளிதரனின் பெயரை பள்ளேகலை சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கு சூட்டவும்.


முத்தையா முரளிதரன் சர்வதேச மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டுத்துறையில் சிறந்த சுழல் பந்து வீச்சாளர் என பிரபல்யம் பெற்று விளங்கும் விளையாட்டு வீரர்.

அவரது பெயரை பள்ளேகலை சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கு சூட்டுவது சாலச் சிறந்ததாகும். அதனை விரைவில் நிறைவேற்றுவது உங்களது பொறுப்பாகும் என கண்டி அஸ்கிரிய பெளத்த பீட மகாநாயக்க தேரர் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிடம் தெரிவித்துள்ளார்.


அமைச்சர் அர்ஜுன ரணதுங்க - அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்ன தேரரை சந்திக்கச் சென்றிருந்தபோதே தேரர் இதனை தெரிவித்துள்ளார்.


அர்ஜுன ரணதுங்க மகாநாயக்க தேரரிடம் கலந்துரையாடுகையில் இந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு அழிந்து போவதற்கு முன்னர் அதனை திறம்பட முன்னெடுக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் கேட்டுக் கொண்டுள்ளதாக மகாநாயக்க தேரரிடம் தெரிவித்தார்.




முரளிதரனின் பெயரை பள்ளேகலை சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கு சூட்டவும். முரளிதரனின் பெயரை பள்ளேகலை சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கு சூட்டவும். Reviewed by Madawala News on 9/19/2017 03:17:00 PM Rating: 5