Ad Space Available here

முற்றத்து மல்லிகை மணக்காது.

 
~அ(z)ஸ்ஹான் ஹனீபா~

தமிழுலகம் அறிந்த பிரபல மார்க்கப் பிரச்சாரகர் மற்றும் மார்க்கத்தை யாருக்கும் வளைந்து நெலிவுடன் பேசாது சத்தியத்திற்காக எங்கும் குரல் கொடுக்கும் உன்னத அழைப்பாளரின் ஜனாஸாவுக்கு இலங்கையின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் மக்கள் கூட்டம் பெருக்கெடுத்திருந்ததை இரவு புத்தளம் Bபக்கா பள்ளியை நெருங்கிய போது தான் கண்டு கொண்டேன்.

உலகில் வாழ்ந்த இக்குறுகிய காலத்தில் ஓரிறைக் கோட்பாட்டிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து, தமக்காக பிராத்தனை புரியும் பெருந்திரளான மக்களையும் சம்பாதித்திருப்பது எனக்குள் நான் செய்ய வேண்டிய இஸ்லாமிய பணியின் முக்கியத்துவத்தை ஒரு கனம் ஆழமாகவே உணர்த்தியது. யார் எதிர்த்த போதும் சத்திய இஸ்லாத்தின் கொள்கைக் கோட்பாடுகளை மக்கள் மன்றத்தில் முன்வைப்பதில் பின்னிற்காதவர் அர்ஹம் மௌலவி என்றால் மிகையாகாது.

ஜனாஸாவுக்கு வருகை தந்திருந்தவர்களுள் பெரும்பாலானோர் வேறு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு பக்கம் சந்தோசமாக இருப்பினும் மறு பக்கம் கவலையைத் தருகிறது ஏனெனில் பல நூறு கிலோ மீட்டர்களையும் தாண்டி வடக்கு, கிழக்கு, தெற்கு போன்ற பகுதிகளிலிருந்து மக்கள் பேரூந்துகளில் அலை மோதிய போதும், அர்ஹம் மௌலவியின் மதிப்பை உணராத ஒரு சில மக்கள், புத்தளத்தில் இருந்து கொண்டே ஜனாஸாவுக்கு வருகை தராதவர்களே அதிகம் எனலாம். இவர்களுக்கு எப்பொழுதும் முற்றத்து மல்லிகை மணப்பதில்லையே!

நான் அடக்கஸ்தளத்தில் நின்று கொண்டிருக்கையில் ஜனாஸாவுக்கு வந்திருந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்து ஒருவர் மற்றவரிடம் "இக்கூட்டமே இப்படியென்றால் மறுமையில் மஹ்ஷர் மைதானத்தில் மக்கள் கூட்டம் எப்படியிருக்கும்!!!" என்று வியந்து பேசியது என் காதுகளை எட்டியது, இவ்வளவு சனப் பெருக்கத்தையும் முறையாக கவனித்து அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புற செய்த அர்ஹம் மௌலவி உருவாக்கிய வாலிபர்களுக்கு இத்தருணத்தில் நன்றிகளை கூறியே ஆக வேண்டும்.
جزاهم الله خيرا 

புத்தளத்தில் அர்ஹம் மௌலவி விட்டுச் சென்ற பாதையை தொடர்வதற்கு ஏனைய கொள்கை ஆலிம்கள் முன்வர வேண்டும், அர்ஹம் மௌலவி சென்ற பின் எல்லாம் முடிந்துவிட்டது அல்லது அவருடைய தஃவாவின் போக்கு போன்று எம்மால் செய்ய முடியாது என்று காரணங்கள் கூறி நிராசையடையாது உயரிய அல்லாஹ்வின் மாக்கத்தை மன தைரியத்துடன் முன் வருவதே மிகச் சிறந்ததாகும். இதனையொட்டி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மரணித்த போது அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்களுக்கு ஆற்றிய உரையை ஒரு கனம் புத்தளம் மக்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

"من كان يعبد محمدا فإن محمدا قد مات، ومن كان يعبد الله فإنه حي لا يموت "

"யார் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கினாரோ நிச்சயமாக அவர் (இன்றுடன்) மரணித்தவிட்டார், யார் அல்லாஹ்வை வணங்கினாரோ நிச்சயமாக அவன் என்றும் மரணிக்காத நித்திய ஜீவனாவான்".

அத்தோடு மேற்குறித்த அறிஞரின் மரணத்தின் பின்பு தான் அவரது அருமை பெருமைகள் அனைத்தும் தெரியவருகிறது, ஆதலால் நபியின் பொன்மொழிக்கேற்ப மணித்தவர்களது நலவுகளை மாத்திரம் பேசுவோம், அவர்களது தவறுகளை குற்றங்களை மண்ணித்து மறப்போம்.
மேலும் உயிரோடு இருக்கும் போதும் மரணித்த பின்பும் அறிஞர்களை இனம் கண்டு வாழ்த்துவோம்.

வல்லவன் அல்லாஹ் அனைவருக்கும் மார்க்கத்தில் போதிய தெளிவுகளைத் தந்து, ஈருலகிலும் வெற்றியாளர்களாக ஆக்கியருளுவதோடு, எம்மை விட்டும் சென்ற ஷைக் அர்ஹம் மௌலவியின் மண்ணறையை சுவனப் பூஞ்சோலையாக மாற்றியமைத்து மறுமையில் எவ்வித கேள்வி கணக்கின்றி சுவனம் நுழையும் பேற்றையும் வழங்கியருள்வாயாக! ஆமீன்

நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
(Husainiyapuram-Puttalam)
16/09/2017
முற்றத்து மல்லிகை மணக்காது. முற்றத்து மல்லிகை மணக்காது. Reviewed by Madawala News on 9/16/2017 05:37:00 PM Rating: 5