Kidny

Kidny

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், கூட்டங்களில் நான் பேசுவதை கேட்காமல் கைத்தொலைப்பேசியில் மூழ்கி இருக்கின்றனர்.


  -எம்.எம்.எம். ரம்ஸீன்-

அமைச்சரவைக் கூட்டங்களில் சில அமைச்சர்கள் அமைச்சரவையில் பேசப்படும் விடயங்களைக் கவனிக்காது கையடக்கத் தொலைபேசியில் மூழ்கியிருப்பதால் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு  கையடக்கத் தொலைபேசி கொண்டு வருவதைத் தான் தடை செய்ததாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்தார்.


ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய ரீதியில் அமுல்செய்யப்படவுள்ள சிறுவர்களைப் பாதுகாப்போம் என்ற தேசிய செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம் இன்று 08.09.2017 வெள்ளிக்கிழமை கண்டி திகணயில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 திகண மத்திய மாகாண விளையாட்டரங்கில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன மத்திய மாகாண ஆளுனர் நிலுக்கா ஏக்கநாயக்க மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர். 

இதில் ஜனாதிபதி தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் நாளாந்தம் அறிக்கையிடப்படும் விடயங்களை நோக்கும்; போது நாட்டில் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக சமூகம் அக்கறை செலுத்த வேண்டிய தேவையை அறிந்து கொள்ளலாம்.  குழந்தைகள் வீடுகளிலன்றி பாடசாலைகளில் தான் பாதுகாப்பான சூழலில் இருக்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் பெற்றோர்களிடம் இருக்கும் சந்தர்ப்பங்களில் தான் பாதுகாப்பற்றவர்களாக இருக்கின்றனர் என்பதை அண்மைக்கால சம்பவங்கள் உணர்த்துகின்றன.


2015 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையாத சிறுமியை தந்தை காலால் உதைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் மற்றும் இப்பரீட்சையில் சித்தியடையாத பிள்ளையை பெற்றோர் இரவு முழுவதும் வீட்டுக்கு வெளியில் நிற்க வைத்த சம்பவம் முதலானவை நமக்கு எதை உணர்த்துகின்றன.

 அரசாங்கம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முதலான பரீட்சைகள் தொடர்பாக பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  


நவீன இலத்திரனியல் சாதனங்கள் சமூகத்திற்கு நன்மை பயக்கும் நோக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் மூலம் பயனைப் பெற்றுக் கொள்பவர்கள் குறைவாகும்.

 அமைச்சரவைக் கூட்டங்களில் கையடக்கத் தொலைபேசி கொண்டு வருவதைத் தடை செய்துள்ளேன். 

இக்கூட்டங்களில் சில அமைச்சர்கள் கையடக்கத் தொலைபேசியை இயக்கிக் கொண்டிருக்கின்றனரே தவிர அமைச்சரவையில் பேசப்படும் விடயங்களைக் கவனிப்பதில்லை. 

அவர்கள் கையடக்கத் தொலைபேசியில் கவனம் செலுத்துவதால் நான் கூறும் விடயங்களில் கவனம் செலுத்துவதில்லை.

மேலும, கடந்த வருடம் அரச துறை அதிகாரிகளுக்கு அரசாங்கத்தின் கொள்கை விளக்கம்  மற்றும் நிர்வாக விடயங்கள் பற்றி தெளிவுபடுத்துவதற்காக  கூட்டமெர்னறை நடாத்தினேன். இதில் நாடு முழுவதும் பணியாற்றும்; பிரதேச , மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு வருகை தந்த மூன்று அதிகாரிகள் கூட்டம் முடியும் வரை தமது கைடயக்கத் தொலைபேசியில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருந்ததாக எனது ஊடகப் பிரிவினர் என்னிடம் தெரிவித்தனர். 

எனவே நாம் எம்மைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்றார்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், கூட்டங்களில் நான் பேசுவதை கேட்காமல் கைத்தொலைப்பேசியில் மூழ்கி இருக்கின்றனர். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், கூட்டங்களில் நான் பேசுவதை கேட்காமல் கைத்தொலைப்பேசியில் மூழ்கி இருக்கின்றனர். Reviewed by Madawala News on 9/08/2017 04:15:00 PM Rating: 5