Kidny

Kidny

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய செயலாளராக நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டார்.


கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளருமான நிஸாம் காரியப்பர் இன்று முதல் (07) முஸ்லிம் காங்கிரஸின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கட்சியின் செயலாளர் மாற்றம் தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது,

செயலாளர் பதவியிலிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் மன்சூர் ஏ. காதிர் தனது பதவியை இராஜினாமா செய்த பின்னரே, இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் தற்போது பிரதி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்காலிகமாக செயலாளர் பதவியிலிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் மன்சூர் ஏ. காதிர் பிரதி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் அனுமதியுடனேயே இந்த செயலாளர் மாற்றம் நடைபெற்றுள்ளது.

எதிர்வரும் காலங்களில் புதிய செயலாளர் நிஸாம் காரியப்பரும், பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதிரும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெற்றிப்பாதையின் வழிநடாத்துவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.

இதுவரை காலமும் செயலாளராக கடைமைற்றி, எனக்கு பக்கபலமாக செயற்பட்ட மன்சூர் ஏ. காதிருக்கு என் ஆழ்மனதிலிருந்து நன்றிகளை தெரிவிப்பதுடன், பிரதி செயலாளரா க செயலாற்ற முன்வந்த அவரின் பெருந்தன்மையையும் பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்.

ஷபீக் ஹுஸைன்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய செயலாளராக நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய செயலாளராக நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டார். Reviewed by Madawala News on 9/07/2017 05:16:00 PM Rating: 5