Kidny

Kidny

“சில் ஆடை” வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு பணம் சேகரிக்க தேரர்கள் வீதிக்கு இறங்கியது தவறு. வாய் திறந்தார் ஞானசார தேரர்.


“சில் ஆடை” வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு பணம் சேகரிப்பதற்கு தேரர்களை வீதிக்கு இறக்கியுள்ள நடவடிக்கை தவறான ஒரு செயலாகவே நான் காண்கின்றேன் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே தேரர் இதனைக் கூறினார்.

சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள்  தமது கட்சி அங்கத்தவர்களை கூட்டி இந்தப் பணத்தைச் சேகரித்திருக்கலாம். தமது கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு 100 ரூபா வீதம் தருமாறு கூறியிருந்தாலும் அப்பணத்தைச் சேர்த்திருக்கலாம். இதற்காக தேரர்களை வீதிக்கு இறக்குவது அங்கீகரிக்க முடியாது எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.
“சில் ஆடை” வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு பணம் சேகரிக்க தேரர்கள் வீதிக்கு இறங்கியது தவறு. வாய் திறந்தார் ஞானசார தேரர். “சில் ஆடை” வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு பணம் சேகரிக்க தேரர்கள் வீதிக்கு இறங்கியது தவறு. வாய் திறந்தார் ஞானசார தேரர். Reviewed by Madawala News on 9/20/2017 12:15:00 AM Rating: 5