Kidny

Kidny

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை. ஜப்பானுக்கு மேலால் சென்று கடலில் வீழ்ந்தது.

 
 
ஜப்பானை சீண்டும் வகையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கிழக்காசிய நாடான வட கொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது; இதற்கு, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வட கொரியா மீது, ஐ.நா., கடுமையான பொருளாதார தடை விதித்துள்ளது. எனினும், வட கொரியா, தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது.


இந்நிலையில் இன்று மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது. அந்த ஏவுகணை வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங்கிலிருந்து கிழக்கு நோக்கி ஜப்பான் வான் எல்லை வழியே பாய்ந்து சென்று பசுபிக் கடலில் விழுந்தது. அந்த ஏவுகணை 770 கி.மீ., உயரத்தில், 3,700 கி.மீ பயணித்து கடலில் விழுந்ததாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது. வடகொரியாவின் இந்த் அத்துமீறலால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை. ஜப்பானுக்கு மேலால் சென்று கடலில் வீழ்ந்தது. வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை. ஜப்பானுக்கு மேலால் சென்று கடலில் வீழ்ந்தது. Reviewed by Madawala News on 9/15/2017 07:31:00 AM Rating: 5