Ad Space avaiable

சைக்கிள் டியுப்பில் பெற்றோலை ஊற்றி, நெல் மூடைகளுக்குத் தீவைத்த கும்பல். #மட்டக்களப்பில் சம்பவம்.


மட்டக்களப்பு, பருத்திச்சேனையில் விவசாயத்துக்காக வைக்கப்பட்டிருந்த விதை நெல் மூடைகள், இனந்தெரியாத நபர்களால், திங்கட்கிழமை அதிகாலை தீயிட்டு  நாசமாக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பருத்திச்சேனை கிராம சேவை பிரிவை சேர்ந்த சுப்பிரமணியம் யுவராஜா என்ற விவசாயின்   விவசாயத்துக்கான சுமார்  1,60,000  ஆயிரம் ரூபாய் பெறுமதியான 39  விதை நெல் மூடைகளே, இவ்வாறு தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நெல் களஞ்சியசாலையின் பின்புறமாக உள்ள கம்பி வேலியை வெட்டி உள்நுழைந்தவர்கள், சைக்கிள் டியுப் மூலம் பெற்றோலை களஞ்சிய சாலைக்குள்  ஊற்றி நெல் மூடைகளுக்குத் தீயிட்டுள்ளதாகத் தெரிவித்த வவுணதீவு பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சைக்கிள் டியுப்பில் பெற்றோலை ஊற்றி, நெல் மூடைகளுக்குத் தீவைத்த கும்பல். #மட்டக்களப்பில் சம்பவம். சைக்கிள் டியுப்பில்  பெற்றோலை ஊற்றி, நெல் மூடைகளுக்குத் தீவைத்த கும்பல். #மட்டக்களப்பில் சம்பவம். Reviewed by Madawala News on 9/27/2017 11:19:00 AM Rating: 5