Kidny

Kidny

இலங்கை அணியை எதிர்கொள்வது கடினம் தான். Pak

இலங்கை கிரிக்கெட் அணியை எதிர்கொள்வது சற்று கடினமான விடயம் என பாகிஸ்தான் அணித்தலைவர் சப்ராஸ் அஹமட் தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தானில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் 28ம் திகதி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்குக்கிடையிலான டெஸ்ட் போட்டி ஒன்று அபு தாபியில் நடைபெறவுள்ளது.


இதேவேளை, பாகிஸ்தான் முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் அணியை முன்னேற்ற செயற்பட்டதை போன்று தானும் செயற்படவுள்ளதாக சப்ராஸ் அஹமட் தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும், எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் சிறந்த துடுப்பாட்ட வரிசை காணப்படுவதாகவும் அதனை எதிர்கொள்வது தமது அணிக்கு சற்று கடினமானதாக அமையும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சப்ராஸ் அஹமட் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கை அணியை எதிர்கொள்வது கடினம் தான். Pak இலங்கை அணியை எதிர்கொள்வது  கடினம் தான். Pak Reviewed by Madawala News on 9/25/2017 10:31:00 PM Rating: 5