Kidny

Kidny

எமது மியன்மார் ரோகிங்யாக உறவுகளுக்காக பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற ஆர்பாட்டம்.

அல்ஹம்துலில்லாஹ் எமது மியன்மார் ரோகிங்யாக உறவுகளுக்காக பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இன்று நடந்த பாரிய ஆர்பாட்டத்தில் கலிமா சொன்ன காரணத்திற்காகவும்,மனித நேயத்துக்காகவும் ,உணர்வால் ஒன்று பட்ட மாபெரும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ரோகிங்யாக மக்களுக்கு தமது உணர்வு பூர்வமான அனுதாபத்தையும் உரிமை குரலலையும் எழுப்பியதுடன் பர்மா மியன்மார் அரசுக்கு எதிராக தமது ஆத்திரத்தையும் ஆதங்கத்தையும்,எச்சரிக்கையும் கண்டணத்தையும் தெரிவித்ததுடன் பிரான்ஸ் அரசிற்கும்,ஜனாதிபதி அவர்களுக்கும் அதே போல் ஜக்கிய நாடுகள் சபைக்கும் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் இந்த மிலேட்சத்தணமான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி மியன்மார் அரசிற்கு எதிராக நடவடிக்கை மேற் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து ஆக்குரோசமாக அரைகூவல்விடுக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் இலங்கை மக்கள் சார்பாக சகோதரி நுஸ்லா நவாஸ் உணர்வு பூர்வமிக்க பிரான்ஸ் மொழியில் உரையாற்றி மக்கள் திரளை கண்ணீர்வடிக்கச் செய்து உணர்வுகளுக்கு உயிரூட்டியிருந்தார்.

 அத்துடன் பிரதான மூன்று ஊடகங்களுக்கு பேட்டியும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அதே போல் ரோகிங்யாக மக்களுக்காக தூஆ செய்து வரகூடிய அனைவரது நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹ் துணைபுரிவானாக ஆமீன் .

JMC-International team


எமது மியன்மார் ரோகிங்யாக உறவுகளுக்காக பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற ஆர்பாட்டம். எமது மியன்மார் ரோகிங்யாக உறவுகளுக்காக பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற ஆர்பாட்டம். Reviewed by Madawala News on 9/17/2017 06:11:00 AM Rating: 5