Ad Space avaiable

மாணவர்களை இலக்கு வைத்து, பாமசிகள் மூலம் போதைப் பொருள் விற்பனை மாபியா. பொலிசார் சுற்றி வளைப்பு.


மாணவர்களை இலக்கு வைத்து இரத்தினபுரி மாவட்டத்தில் பாமசிகள் மூலம் போதைப் பொருள் விற்பனை மாபியா இடம் பெற்று வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


திட்டமிட்டு நடைமுறைப்படுத் தப்பட்டு வரும் இந்த போதைப் பொருள் விற்பனை பாடசாலை மாணவர்கள் கிராம தோட்டப்பகுதி இளைஞர்களை இலக்கு வைத்து செயற்படுத்தப்பட்டு வருவதனால் இதனைக் கட்டுப்படுத்த இரத்தி னபுரி மாவட்ட பொலிஸ் விசேட போதைப் பொருள் பொலிஸ் சுற்றி வளைப்பு பிரிவு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.


ஆரம்பத்தில் போதையை ஏற்படுத்த வல்ல போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த இந்த பாமசிகளில் தற்போது குறுகிய காலத்தில் உடல் , உள, உயிர் பாதிப்புக்களை ஏற்படுத் தவல்ல குளிசைகள் விற்பனை செய்யப்பட்டு வருவது விசாரணை களின் போது கண்டறியப் பட்டுள் ளது.

 இவற்றில் சில கொடிய நோய்களுக்கு பயன் படுத்தும் நோய்களுக்கான குளிசைகள் எனவும் வைத்தியர்களின் சிபாரிசு இன்றி விநியோகிக்க முடியாத இந்த உயிராபத்துக்களை ஏற்ப டுத்தக்கூ டிய குளிசை வகைகள் கொள்ளை விலையில் விற்பனை செய்யப்படு வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரத்தினபுரியில் மாணவர் ஒருவருக்கு போதை குளிசை விற்பனை செய்த பாமசியொன்றில் சோதனை நடத்திய பொலிசார் , அங்கு விற்பனைக்கு பொதியிடப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்த போதை குளிசைகளை கைப்பற்றியுள்ளதாக இப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரசாத் மஸ்இம்புல தெரிவித்தார்.

போதைப்பொருள்பாவனைக்குட்பட்டு பாதிப்புக்குள்ளாகியுள்ளவர்களுக்கான ஒரு பதிலீட்டு போதைப் பொருளாக இவை பயன்படுத்தப் படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த போதை குளிசை ஒன்றின் விலை 10 முதல் 20ரூபாவாக உள்ள போதிலும் இவை 200 தொடக்கம் 250 வரையில் விற்பனை செய்யப்ப
டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாணவர்களை இலக்கு வைத்து, பாமசிகள் மூலம் போதைப் பொருள் விற்பனை மாபியா. பொலிசார் சுற்றி வளைப்பு.  மாணவர்களை இலக்கு வைத்து, பாமசிகள் மூலம் போதைப் பொருள் விற்பனை மாபியா. பொலிசார் சுற்றி வளைப்பு. Reviewed by Madawala News on 9/25/2017 10:32:00 AM Rating: 5