Ad Space avaiable

குற்றவாளிகளுக்காக சில பௌத்த மத குருமார் ‘பின்னபாத்த’ முறையில் பணம் சேகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.


- ஜே.எம்.ஹபீஸ்-

புண்ணிய  கருமங்களுக்காக உதவி கோரும் ‘பின்னபாத்த’ என்ற புனித யாத்திரையை ஒரு சில பௌத்த மத குருமார் நீதிமன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டவர்களை விடுவிக்கம் செயலுக்கு முன் எடுப்பது ஒரு பொருத்தமான விடயமல்ல என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவித்தார். (20.9.2017)

கண்டியில் நடந்த வைபவம் ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவிததார். அவர் மேலும் தெரிவித்ததாவது-

அவர்கள் இதனை விட்டு விகாரைகள் அமைப்பதற்கு இவ்வாறு ஒரு முயற்சி செய்வார்களாயின் அது பொருத்தமாக இருக்கும் என்றார்.

அரசியல் வாதிகளில் நேரசூசிக்கு அமைய நடந்துகொள்வது வரவேற்கத்தக்கதல்ல.

அதுமட்டு மல்லாது புரான காலம் தொட்டு பௌத்த மதகுருக்கள் தமக்கு தானம் கேட்டு பாதைவழியே செல்வார்களே ஒழிய நிதி சேகரிக்கச் சென்ற வரலாறுகள் இல்லை.


அதே போல்  முன்னாள்  பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களது அரசியல் உரிமை குடிஉரிமை என்பன பறிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட போது பொதுமக்களிடம் நிதி சேகரிக்கப்பட்டதே ஒழிய இவ்வாறு பௌத்த மத குருக்கள் பின்னபாத்த என்ற இந்த பாத்திரம் ஏந்தி பணப்பிச்சை கேட்கும் நிலைக்கு அனுப்பப்பட வில்லை என்றார்.

குற்றவாளிகளுக்காக சில பௌத்த மத குருமார் ‘பின்னபாத்த’ முறையில் பணம் சேகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றவாளிகளுக்காக  சில பௌத்த மத குருமார்  ‘பின்னபாத்த’ முறையில் பணம் சேகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. Reviewed by Madawala News on 9/21/2017 09:17:00 AM Rating: 5