Kidny

Kidny

இதற்கு நாம் என்ன பதில் கூறப்போகின்றோம்..?


நாம்தான் பதில்கூறவேண்டியவர்கள் இவர்களின் விடயத்தில்....

வயது சுமார் நாற்பதையும் எட்டிவிட்டது இருந்தும் அவர் திருமணமாகாத பெண். குடும்பத்தில் தாய் தந்தையர் நீண்டகாலத்திற்கு முன் மரணித்துவிட்டனர், அதிக பெண்களை கொண்ட குடும்பம். அதில் பலர் திருமணம் செய்துவிட்டனர் ஆனால் இந்தப் பெண் மட்டும் இன்னும் திருமணமாகாதவர்.

தனக்கென்று ஒரு வீடோ தொழிலோ கவனிப்போ இல்லாமல் தன் சகோதரிகளின் வீட்டிலேயே வசித்து, சிறு சிறு கைத்தொழில்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாய் ஒன்று திரட்டிய பணத்தில் தனக்கென்று உள்ள நிலத்தில் ஒரு வீட்டை கட்டிக்கொள்ள பாடுபடுகிறார்.

வெறும் இரண்டு அறைகளை கட்டி முடிக்க அவரின் வயதோ நாற்பதாகிவிட்டது. கட்டிய அறைகள் பூசப்படாமலும் திண்ணைகள் மொழுகப்படாமலும் கூரைக்கு என்ன செய்வதென்றே தெரியாமலும் அப்படியே காணப்படுகின்றன அவரைப்போலவே அந்த வீடும்.

ஒரு மலசலகூடத்திற்கு கூட வசதி இல்லாத அவலம். சிலர் மலசலகூடம் கட்ட கற்கள் வாங்கிக்கொடுத்தனர், சிலர் சீமெந்து வாங்கிக்கொடுத்தனர், ஆனால் அதனை செய்து முடிக்க கூலி கொடுப்பதற்கு பணமில்லை. வயதோ நாற்பது ஆகிவிட்டது.

இணையும் இல்லை, துணையும் இல்லை, தனிமரமாய் இருந்து தனக்கு கொஞ்சம் கொஞ்சம் எப்போதேனும் மற்றவர்கள் செய்யும் உதவியாலும் சிறு சிறு கைத்தொழில்களாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவர்.

இப்படி எத்தனையோ அவலங்கள் நிறைந்த எமது மண்ணில்தான் நாங்கள் மாடி மாடியாக கட்டுகிறோம், கோடி கோடியாக கொட்டுகிறோம். உண்ண உணவின்றியும் குழுந்தைகள் பசியோடு அழும் வீடுகளும் இருக்கின்றன எம் அக்கரைப்பற்று மண்ணில் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை.

இறைவன் உங்களுக்கு அருள்புரிவான், உங்கள் உழைப்புக்களில் இந்த ஏழைப்பெண்ணுக்கும் உதவிடுங்கள். உங்கள் செல்வங்களில் இவர்களுக்குரியதையும் கொடுத்துவிடுங்கள். உங்கள் நல்லுள்ளத்தின் முயற்சியால் இவருக்கும் ஒரு நிம்மதியான வாழ்வை ஏற்படுத்திக்கொடுங்கள்.

அரசியல்வாதிகளோ அமைச்சர்களோ வேண்டாம், விளம்பரங்கள் இல்லாது அல்லாஹ்வின் முன்னால் அங்கீகாரம் பெறவிரும்பும் நல்லுள்ளங்கள் மட்டும் இந்தப் பெண்ணுக்கு உதவ முன்வாருங்கள்.

அவருக்கு உதவ விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

Royal Youths - Sri Lanka
(077) 199 0872


(அவருடைய அனுமதியுடனேயே இந்தப்பதிவு இடப்படுகிறது)
இதற்கு நாம் என்ன பதில் கூறப்போகின்றோம்..? இதற்கு நாம் என்ன பதில் கூறப்போகின்றோம்..? Reviewed by Madawala News on 9/12/2017 07:42:00 PM Rating: 5