tg travels

சம்பளப்பணத்தை கோரி மனைவி தொல்லை... கணவன் நஞ்சருந்தி சீரியஸ். #இலங்கை


சம்பளப் பணத்தை கேட்டு, மனைவி நாள் தோறும் தொந்தரவு செய்ததால்,தொல்லை தாங்க முடியாத கணவர், நஞ்சருந்தி தற் கொலைக்கு முயன்றுள்ளார். .

யாழ். உடுவில் பகுதியில் இந்தச் சம்ப வம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

யாழ். உடுவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குறித்த குடும்பஸ்தர் தினம்
தோறும் உழைத்து வரும் சம் பளப் பணத்தை, அவரது மனைவி
தினமும் கேட்டுத் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

சம்பவ தினத்தன்றும் சம்பளப் பணத்தை மனைவி கேட்ட போது பணத்தினைக் கொடுக்க மறுத்த கணவர் தனது மனைவியுடன் சண் டையிட்டு,இறுதியில் தற்கொலைக்கு முயன்று நஞ்சருந்தியுள்ளார்.

 குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைகளுக்கு உட்படுத் தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பளப்பணத்தை கோரி மனைவி தொல்லை... கணவன் நஞ்சருந்தி சீரியஸ். #இலங்கை சம்பளப்பணத்தை கோரி மனைவி தொல்லை... கணவன் நஞ்சருந்தி சீரியஸ். #இலங்கை Reviewed by Madawala News on 9/09/2017 07:33:00 PM Rating: 5